கலாசாரத்துறை அமைச்சகம்
யுனெஸ்கோவின் கலாச்சாரப் பாரம்பரிய பட்டியலில் தீபாவளிப் பண்டிகை சேர்க்கப்பட்டது
प्रविष्टि तिथि:
10 DEC 2025 12:09PM by PIB Chennai
இந்தியாவில் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளி, தற்போது யுனெஸ்கோவின் கலாச்சாரப் பாரம்பரிய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. புதுதில்லி செங்கோட்டையில் இன்று நடைபெற்ற யுனெஸ்கோ பிரதிநிதிகள் குழுவின் 20-வது அமர்வின் போது சேர்க்கப்பட்டது.
மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் கலாச்சாரத்துறை செயலாளர் திரு விவேக் அகர்வால், 194 உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச நிபுணர்கள் யுனெஸ்கோவின் உலகளாவிய பிரதிநிதிகள், கலாச்சார அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் இம்முடிவு அமல்படுத்தப்பட்டது.
அப்போது சர்வதேச பிரதிநிதிகள் இடையே உரையாற்றிய மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர், தீபாவளி பண்டிகை யுனெஸ்கோவின் பாரம்பரிய கலாச்சாரப் பட்டியலில் இணைக்கப்பட்ட இத்தருணம் இந்தியாவிற்கும், காலத்தால் அழியாத உணர்வை உயிர்ப்புடன் வைத்திருக்கும் உலகில் உள்ள சமூகங்களுக்கும் மிகுந்த பெருமையளிப்பதாக கூறினார். இந்தப் பண்டிகை இருள் நீங்கி ஒளி, நம்பிக்கை, புதுப்பித்தல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றைக் குறிக்கும் உலகளாவிய செய்தியை உள்ளடக்கியது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
மக்களை மையமாக மற்றும் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இப்பண்டிகை குறித்து எடுத்துரைத்த மத்திய அமைச்சர், பாரம்பரிய குயவர்கள், பண்டிகைக்கான அலங்காரங்களைத் தயாரிக்கும் கைவினைஞர்கள், விவசாயிகள், இனிப்பு தயாரிப்பாளர்கள், பூசாரிகள் மற்றும் பழங்கால பழக்கவழக்கங்களை கடைபிக்கும் குடும்பங்கள் உள்ளிட்ட மில்லியன் கணக்கானவர்களின் பங்களிப்புகளால் தீபாவளி செழிக்கிறது என்று அவர் தெரிவித்தார். இந்த அங்கீகாரம், இந்த பாரம்பரியத்தை நிலைநிறுத்தும் கூட்டு கலாச்சார உழைப்புக்கானது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201320®=3&lang=1
***
SS/IR/RJ/SH
(रिलीज़ आईडी: 2201725)
आगंतुक पटल : 10