சிக்கிமின் தினசரி வாழ்வை காட்சிப்படுத்திய திரிபேனி ராயின் 'ஷேப் ஆஃப் மோமோஸ்'
கோவாவில் நடைபெறும் 56-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் , சிக்கிமின் முதல் பெண் இயக்குநரான திரிபேனி ராயின் முதல் திரைப்படமான 'ஷேப் ஆஃப் மோமோஸ்' இந்திய திரைப்படப் பிரிவில் திரையிடப்பட்டது.
மோமோஸ் என்ற உணவு கலாச்சாரத்தின் மையத்தில் இருந்து இத்திரைப்படத் தலைப்பு வந்ததாக இயக்குநர் கூறினார். இது சிக்கிமின் கலாச்சாரப் பின்னணியில் வேரூன்றிய கதை. அங்குள்ள மக்களின் தினசரி வாழ்வையும் உணர்ச்சிகளையும் உணர்வுப்பூர்வமாக இந்தப்படம் சித்தரிக்கிறது.
சிக்கிமின் சாதாரண மக்களே தங்கள் கதைகளின் நாயகர்களாக இருப்பதைச் சித்தரிக்க விரும்பியதாக திரிபேனி ராய் தெரிவித்தார்.
சிக்கிம் திரைப்படத் துறை ஆரம்ப நிலையில் இருப்பதால், தொழில்நுட்ப சவால்கள் இருந்தபோதிலும், இந்தப் படம் பல சர்வதேச விழாக்களில் பயணித்துள்ளது. இது சிக்கிமின் வளர்ந்து வரும் திரைப்படக் கலாச்சாரத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2195813®=3&lang=1
***
SS/VK/RK
रिलीज़ आईडी:
2200798
| Visitor Counter:
17