இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கரண் சிங் தியாகிக்கு சிறந்த அறிமுக இயக்குநர் விருது
சினிமாவின் புதிய திறமைகளைக் கொண்டாடும் விதமாக, 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், கரண் சிங் தியாகி, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தனது ‘கேசரி சேப்டர் 2’ திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநர் விருதை வென்றார். தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் இந்த விருதை வழங்கினார்.
திரைப்பட எழுத்தாளரும், தயாரிப்பாளருமான திரு தியாகி, இப்படத்தில் ஜாலியன்வாலா பாக் படுகொலையின் உண்மையை வெளிப்படுத்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்துப் போராடிய துணிச்சலான வழக்கறிஞர் சங்கரன் நாயரின் அசாத்தியமான உண்மை கதையைச் சொல்கிறார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் அழுத்தமான தருணங்கள் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டதற்காக நடுவர்கள் இயக்குநரை வெகுவாகப் பாராட்டினர். அவரது கதைசொல்லலும் காட்சி சிறப்பும், திரு தியாகியை கவனிக்கப்பட வேண்டிய இயக்குநராக நிலைநிறுத்தியுள்ளன.
சிறந்த அறிமுக இயக்குநர் விருது என்பது படைப்புத் திறன் மற்றும் கலை ஆற்றல் கொண்ட புதிய குரல்களை அங்கீகரிப்பதற்காக திரைப்படவிழாவின் தொடர்ச்சியான முயற்சியாகும். இந்த விருது ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழுடன் வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196043®=3&lang=1
***
SS/VK/RK
रिलीज़ आईडी:
2200793
| Visitor Counter:
17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
Malayalam
,
Khasi
,
English
,
Urdu
,
Konkani
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Gujarati
,
Kannada