பிரதமர் அலுவலகம்
அரசியல் சாசன தினத்தன்று முகப்புரை வாசிப்பில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் இணைந்தனர்
இடுகை இடப்பட்ட நாள்:
26 NOV 2025 9:18PM by PIB Chennai
அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு, இன்று பிரதமர் அலுவலகத்தில் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரை வாசிக்கப்பட்டது.
இந்தப் பெருமைமிகு வாசிப்பில் பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி கே மிஸ்ரா, பிரதமரின் முதன்மைச் செயலாளர்-2 திரு சக்திகாந்த தாஸ், பிரதமரின் ஆலோசகர் திரு தருண் கபூர், பிரதமரின் சிறப்பு செயலாளர் திரு அதிஷ் சந்திரா உள்ளிட்ட பிரதமர் அலுவலக மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“அரசியல் சாசன தினமான இன்று, பிரதமர் அலுவலகத்தில் அரசியல் சாசனத்தின் முகப்புரை வாசிக்கப்பட்டது. இந்த வாசிப்பு நிகழ்வில் பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி கே மிஸ்ரா, பிரதமரின் முதன்மைச் செயலாளர்-2 திரு சக்திகாந்த தாஸ், பிரதமரின் ஆலோசகர் திரு தருண் கபூர், பிரதமரின் சிறப்பு செயலாளர் திரு அதிஷ் சந்திரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்."
***
(Release ID: 2195051)
SS/SMB/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2200285)
வருகையாளர் எண்ணிக்கை : 23
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam