இந்திய சர்வதேச திரைப்பட விழா 2025: 500-க்கும் மேற்பட்ட படைப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவின் சிறந்த 20 குறும்படங்கள்
56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் கதை அல்லாத திரைப்படங்களுக்கான தேர்வுக் குழுத் ) தலைவர் திரு தரம் குலாட்டி மற்றும் தேர்வுக் குழு உறுப்பினர்கள் செய்தியாளர்ச் சந்திப்பில் உரையாற்றினர். இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட படைப்புகளிலிருந்து சிறந்த 20 படங்களைத் தேர்ந்தெடுப்பது சவாலானதாக இருந்தாலும், அது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
மொழி மற்றும் பிராந்திய வேறுபாடுகளைக் கடந்து கதைக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டதாகக் குழுவினர் தெரிவித்தனர் மணிப்பூர் போரை விளக்கும் பேட்டில்ஃபீல்ட் ஆவணப்படமும், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் தியாகத்தைப் போற்றும் தொடக்கத் (திரைப்படமான ககோரி-ம் முக்கியமானவையாகும் இவற்றுடன் ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் சிசுக்கொலை மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்குத் தீர்வுகண்ட கிராமத்தின் கதையை பிப்லாந்த்ரி விவரிக்கிறது மேலும் வடகிழக்கு மாநிலங்களின் படைப்புகளான 'ஷங்ரிலா' மற்றும் 'பத்ரலேகா, ஆன்மீகப் பயணத்தை அழகாகச் சித்தரிக்கும் 'ஆதி கைலாஷ் மற்றும் சிறந்த ஒளிப்பதிவிற்காகக் கவனிக்கப்பட்ட நீல்கிரி' ஆகிய படங்களும் தேர்வுக் குழுவின் சிறப்புப் பாராட்டுகளைப் பெற்றன.
இந்தியாவின் கலாச்சாரப் பன்முகத்தன்மையை இந்தப் படங்கள் பிரதிபலிப்பதாகக் குழுவினர் ஒருமித்த கருத்தைத் தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192664
***
SS/SE/RK
रिलीज़ आईडी:
2200277
| Visitor Counter:
17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Marathi
,
हिन्दी
,
Konkani
,
Telugu
,
Kannada
,
Malayalam
,
Assamese
,
Bengali
,
English
,
Urdu
,
Gujarati