இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அதிக உடற்பயிற்சி விழிப்புணர்வை ஏற்படுத்திய ஃபிட் இந்தியா ஞாயிற்றுக்கிழமைகள் குறித்துப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 01 DEC 2025 9:05AM by PIB Chennai

"நமது இளம் நண்பர்களிடையே மிகவும் பிரபலமாகி வரும் பல போட்டிகள் உள்ளன. ஃபிட் இந்தியா ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டுதல் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க பலர் ஒன்றுகூடி வருகின்றனர். இவை அனைத்தும் உடல்தகுதியை மேம்படுத்துவதற்கான வழிகள்" என்று பிரதமர் திரு மோடி ஞாயிறன்று 128-வது 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசும்போது கூறினார்.

தற்செயலாக, நாடு தழுவிய சைக்கிள் ஓட்டுதலின் 51-வது நிகழ்வு இந்த ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்றவரும் ராஜஸ்தான் விளையாட்டுத்துறை  அமைச்சருமான திரு ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்வை முன்னணியில் இருந்து வழிநடத்தினார்.

சிறந்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு கலாச்சாரத்தை முன்னேற்றுவதில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொடர்ச்சியான ஊக்கத்தை கர்னல் ரத்தோர் பாராட்டினார்.

"உலகில் மிகக் குறைவான பிரதமர்கள் மட்டுமே தங்கள் குடிமக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் கவனம் செலுத்தி, இவ்வளவு தெளிவான அழைப்புகளை விடுக்கின்றனர். திரு நரேந்திர மோடி ஃபிட் இந்தியா பற்றி மீண்டும் மீண்டும் பேசியுள்ளார்," என்று அவர் குறிப்பிட்டார்.

"எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்பதில் இருந்து சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) சாப்பிடுவது மற்றும் உடல் பருமனைக் குறைப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படுவது வரை, யோகா, மிதிவண்டி ஓட்டுதல், ஓட்டம் அல்லது பிற பல்வேறு வழிகள் மூலம் ஆரோக்கியமாக இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பிரதமர் எப்போதும் நம்மை வலியுறுத்தி வருகிறார். ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டுதல் மூலம் நாட்டில் உருவாக்கப்பட்ட இயக்கம் இதற்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டு," என்று ஒலிம்பிக்கில் தனிநபர் வெள்ளிப் பதக்கம்  வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற கர்னல் ரத்தோர் மேலும் கூறினார்.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா வழிகாட்டுதலின் கீழ், ஃபிட் இந்தியா ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டுதல் டிசம்பர் 2024-ல் தொடங்கியது. இன்று, ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டுதல் ஓர் உண்மையான பொது இயக்கமாக வளர்ந்துள்ளது, நாடு முழுவதும் பொதுமக்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196710&reg=3&lang=1

***

SS/SMB/RJ


(रिलीज़ आईडी: 2197025) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , Marathi , हिन्दी , Bengali , Telugu