இந்திய சர்வதேச திரைப்பட விழா 2025: 'ஷிகார்', 'நீல்கிரிஸ்' மற்றும் 'முக்கம் போஸ்ட் பொம்பில்வாடி' ஆகிய திரைப்படங்களின் படக்குழுவினருடனான செய்தியாளர் சந்திப்பு
கோவாவில் நடைபெற்று வரும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், 'ஷிகார்', 'நீல்கிரிஸ்' மற்றும் 'முக்கம் போஸ்ட் பொம்பில்வாடி' ஆகிய மூன்று திரைப்படங்களின் படக்குழுவினருடனான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அசாம் திரைப்படமான 'ஷிகார்' குறித்துப் பேசிய இயக்குநர் திரு திவாங்கர் போர்கோஹெய்ன், மறைந்த பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜுபீன் கார்க் நடித்த கடைசிப் படமான இது, லண்டனில் 70 சதவீதம் படமாக்கப்பட்ட முதல் அசாம் படமாகும் என்று தெரிவித்தார். பெரும்பாலான காட்சிகளைத் தான் கவுஹாத்தியிலிருந்தே இணையம் வழியாக இயக்கியதாக இயக்குநர் சுவாரஸ்யத் தகவலைப் பகிர்ந்தார்.
வனவிலங்குகளை மையமாகக் கொண்ட 'நீல்கிரிஸ்' ஆவணப்படம் குறித்துப் பேசிய இத்திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளர் ஆதர்ஷ், விலங்குகளைப் படம்பிடிப்பதில் உள்ள சவால்களை விவரித்தார். மனிதர்களும் விலங்குகளும் இணைந்து வாழ்வதை மையமாகக் கொண்ட இப்படம், முழுமையாக இந்தியக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டது என்று பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், 1942-ம் ஆண்டு சுதந்திரப் போராட்டக் காலக்கட்டத்தை நகைச்சுவையுடன் விவரிக்கும் மராத்திப் படமான 'முக்கம் போஸ்ட் பொம்பில்வாடி' குறித்து பேசிய இத்திரைப்படத்தின் இயக்குநர் திரு பரேஷ் மோகாஷி, ஒரு மேடை நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தின் மூலம், தீவிரமான கருத்துக்களை நகைச்சுவை வழியே எளிதாகக் கடத்த முடியும் என தெரிவித்தார். இந்தியாவின் கலாச்சாரப் பன்முகத்தன்மையை இப்படங்கள் பிரதிபலிப்பதாக இந்த அமர்வு அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193172®=3&lang=2
***
SS/SE/RJ
रिलीज़ आईडी:
2196534
| Visitor Counter:
15