இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இறுதிக்கட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரபல நடிகர் அமீர் கான் பங்கேற்பு
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (ஐஎஃப்எஃப்ஐ) , "சமூக மாற்றம் மற்றும் உள்ளடக்கத்தின் கதைக் கலைஞர்" என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரபல நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான அமீர் கான் கலந்து கொண்டார்.
பிரபல திரைப்பட விமர்சகர் பரத்வாஜ் ரங்கன், அமர்வின் நெறியாளராக செயல்பட்டார். அண்மையில் மறைந்த பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவுக்கு அஞ்சலி செலுத்தி தொடங்கப்பட்ட அமர்வில், இந்திய திரைத்துறையின் ஹீ-மேன் என்று புகழப்பட்டாலும், காதல், நகைச்சுவை மற்றும் நாடகம் உள்ளிட்ட அனைத்து வகை கதாபாத்திரங்களிலும் கோலோச்சினார் என்று அமீர் கான் புகழாரம் சூட்டினார்.
திரைப்படங்களை அணுகுவதில் தனது அணுகுமுறை எப்போதும் உள்ளுணர்வு சார்ந்ததாகவே இருந்து வருகிறது என்று கூறிய அவர், "ஒரு குறிப்பிட்ட வகையான படத்தை நான் செய்து முடித்தவுடன், நான் அதிலிருந்து வேறுபட்டு முன்னேற விரும்புகிறேன்", என்று அவர் தெரிவித்தார்.
ஒரு முக்கிய அறிவிப்பாக, "நான் தற்போது தயாரித்துள்ள லாகூர் 1947, ஹேப்பி படேல் மற்றும் இன்னும் சில படங்களின் வேலைகளை முழுமையாக முடித்தவுடன், எனது கவனத்தை தயாரிப்பிலிருந்து நடிப்புக்கு முழுவதுமாக மாற்றவிருக்கிறேன்" என்று அமீர் கான் கூறினார். அமர்வின் இறுதியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜூ, அமீர் கானை கவுரவித்தார் .
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2195587
(Release ID: 2195587)
***
AD/BR/SH
रिलीज़ आईडी:
2195661
| Visitor Counter:
12