இந்திய சர்வதேச திரைப்பட விழா 2025-ன் 4-ம் நாள் படைப்பாக்க மனங்கள் மற்றும் திரைத்துறை ஆளுமைகளின் சங்கமமாக இருந்தது
இந்திய சர்வதேச திரைப்பட விழா 2025-ன் 4-ம் நாள் படைப்பாக்க மனங்கள் மற்றும் திரைத்துறை ஆளுமைகளின் சங்கமமாக இருந்தது. உலகளாவிய திறமையாளர்கள் சந்திப்பு உற்சாகத்தை அளித்தது. நாளைய படைப்பாக்கம் மனங்களின் சவால் என்ற தலைப்பிலான நிகழ்வுடன் இந்த நாள் (நவம்பர் 23, 2025) தொடங்கியது. இதில் இளம் திரைப்பட இயக்குநர்கள் தங்களின் நிறைவடைந்த பணிகள் குறித்து எடுத்துரைத்தனர்.
பத்திரிகை தகவல் அலுவலக ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ‘டே டல் பாலோ’, ‘பைக் ரிவர்’ ஆகிய திரைப்படங்களின் இயக்குநர்களும் நடிகர்களும் பங்கேற்று தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதே போல், ‘சீசைட் செரன்டிபிட்டி’ ‘டைகர்’ ஆகிய திரைப்படங்களின் குழுவினர் ஆசிய சினிமா பற்றிய வலுவான நிலைமைகளை எடுத்துரைத்தனர்.
நீலகிரி – பகிரப்பட்ட வனப்பகுதிகள் உள்ளிட்ட மாநில மொழித் திரைப்படங்கள், ஆவணப்படங்கள் பற்றி அவற்றில் பணியாற்றியவர்கள், தங்களின் படைப்பாக்க அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
பிரபல திரைப்பட நடிகர் அனுபம் கெர், ‘கைவிடுதல் என்பது ஒரு தெரிவு அல்ல’ என்ற தலைப்பில் கலா அகாடமியில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றினார். அவரது உரை ஆற்றல் மிக்கதாகவும், ஊக்கம் அளிப்பதாகவும் இருந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193253
***
AD/SMB/KPG/SE
Release ID:
2195491
| Visitor Counter:
3