இந்திய சர்வதேச திரைப்பட விழா 2025: திரைப்படங்களின் மூலம் இயக்குநர்கள் உணர்ச்சி, நுண்ணறிவு மற்றும் கற்பனையைக் கொண்டு வருகின்றனர்
கோவாவின் பனாஜியில் நடைபெறும் 2025-ம் ஆண்டுக்கான இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 5 -ம் நாள், திரைப்பட இயக்குநர்கள் , கதாசிரியர்கள், கதைசொல்லிகள் மற்றும் படைப்பாற்றல் குழுக்களை ஒன்றிணைத்து, வளமான உரையாடல்கள், திரையிடல்கள் மற்றும் சிந்தனையைத் தூண்டும் பத்திரிகையாளர் சந்திப்புகளைக் கொண்டிருந்தது.
லாலா & பாப்பி என்பது மாறிய பாலினத்தவரின் நெகிழ்ச்சியான காதல் கதையை சித்தரிக்கிறது. லாலா, பாப்பி என்ற இரண்டு இளம் வயதினரின் உணர்ச்சிப் பிணைப்பையும், அதனால் ஏற்படும் மாற்றங்களையும் விவரிக்கிறது.
தயாரிப்பாளர் பாபி பேடி படத்தின் உலகளாவிய மையத்தை எடுத்துரைத்தார். கடந்த ஆண்டு ஐஎப்எப்ஐ-யில் இந்த திட்டம் எவ்வாறு பிறந்தது என்பதை அவர் பகிர்ந்து கொண்டார். இருவரது உறவுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இருந்தபோதிலும், சமூகம் இன்னும் ஏற்றுக்கொள்ளாத நிலை இருப்பதை படம் பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.
இயக்குநர் கைசாத் குஸ்டாட் இந்தப் படத்தை ஒரு நேர்மையான, உலகளாவிய காதல் கதை என்று விவரித்தார். ஓரினச்சேர்க்கையாளர் சமூகங்களுடனான பல வருட ஆராய்ச்சி மற்றும் ஈடுபாடு திரைக்கதையை வடிவமைத்ததாக அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193799
***
SS/PKV/KPG/SE
रिलीज़ आईडी:
2195485
| Visitor Counter:
15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Konkani
,
Gujarati
,
Malayalam
,
Manipuri
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Telugu
,
Kannada