இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சேகர் கபூர் மற்றும் ட்ரிஷியா டட்டில் படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பம் குறித்து உரையாற்றினர்
கோவாவில் நடைபெற்று வரும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், 'செயற்கை நுண்ணறிவு மூலம் சினிமாவை மாற்றியமைப்பதற்கான தேவை உள்ளதா என்பதை குறித்து சிறப்புக்கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இயக்குநர் சேகர் கபூர் மற்றும் பெர்லின் திரைப்பட விழாவின் இயக்குநர் ட்ரிஷியா டட்டில் ஆகியோர் பங்கேற்றனர்.
தொழில்நுட்பம் அல்லது செயற்கை நுண்ணறிவு எவ்வளவு வளர்ந்தாலும், மனித கற்பனைத் திறனே சினிமாவின் அடிப்படை என்று சேகர் கபூர் வலியுறுத்தினார். "செயற்கை நுண்ணறிவு கருவிகளை இயக்குவது மனிதர்களே, எனவே, எந்தவொரு தொழில்நுட்பமும் மனிதப் படைப்பாற்றலை மிஞ்ச முடியாது," என்று அவர் கூறினார். சிறந்த நடிகர்களின் கண்கள் வெளிப்படுத்தும் நுட்பமான உணர்வுகளை செயற்கை நுண்ணறிவால் புரிந்து கொள்ள முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொழில்நுட்பத்தின் அணுகுமுறை குறித்துப் பேசுகையில், தனது சமையல்காரர் 'சாட் ஜிபிடி' மூலம் 'மிஸ்டர் இந்தியா 2' படத்திற்குத் திரைக்கதை எழுதிய சுவாரஸ்யமான சம்பவத்தை குறித்து சேகர் கபூர் பகிர்ந்து கொண்டார்.
செயற்கை நுண்ணறிவு என்பது மாற்றமே தவிர புதிய நடைமுறை அல்ல. அது கடந்த காலத்தைப் பிரதிபலிக்குமே தவிர, எதிர்காலத்தைக் கணிக்காது. உண்மையான கதைசொல்லல் என்பது மனித உணர்வுகள் சார்ந்தது," என்ற கருத்தோடு அமர்வு நிறைவுற்றது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192938
***
SS/SE
रिलीज़ आईडी:
2195479
| Visitor Counter:
20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Khasi
,
English
,
Urdu
,
Konkani
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam