இரு உலகங்கள், ஒரு சந்தம்: லதா மங்கேஷ்கரின் மரபினை கௌரவித்த விஷால் பரத்வாஜ், பி அஜனீஷ் லோக்நாத்
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், “இந்தியாவின் சந்தங்கள்: இமயமலையிலிருந்து பீடபூமி வரை” என்ற தலைப்பில் நடைபெற்ற வருடாந்தர லதா மங்கேஷ்கர் நினைவு உரையாடல் துடிப்புமிக்க இசைப்பயணம், நினவுகளை இணைத்தல், இன்னிசை உருவாக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்தியது.
இசையமைப்பாளர்கள் விஷால் பரத்வாஜ், பி அஜனீஷ் லோக்நாத் ஆகியோருடனான உரையாடலை விமர்சகர் சுதிர் ஸ்ரீனிவாஸ் ஒருங்கிணைத்தார். தங்களின் படைப்பாக்க உலகங்களில் மாறுபட்ட இரண்டு இசை மனங்களை பார்வையாளர்கள் காண்கின்ற அரிய வாய்ப்பைப் பெற்றனர்.
திரைப்படத் தயாரிப்பாளர் ரவி கொட்டாரக்கரா, உரையாடல்களை வாழ்த்தியதுடன் இந்நிகழ்ச்சி இனிமையாகத் தொ டங்கியது. இசை என்பது நம்மை மேலும் உயர்த்தும் சக்தியாக இருக்கிறது. அனைவரையும் ஒருங்கிணைக்கிறது என்று அவர் பேசும்போது கூறினார். இதைத் தொடர்ந்த உரையாடல் நகைச்சுவை நிறைந்ததாகவும், ஆழமான இசை ஞானத்தை வெளிப்படுத்துவதாகவும் இருந்தது.
பார்வையாளர்களுக்கு இடம் அளித்த இந்த உரையாடல் நிகழ்வின் பாடல்கள், கதை சொல்லுதல் முதல் செயற்கை நுண்ணறிவு, இசையின் எதிர்காலம் வரை விவாதிக்கப்பட்டது. சில நிலைகளில் செயற்கை நுண்ணறிவு இசைக்கு உதவக்கூடும் என்று அஜனீஷ் கருத்துத் தெரிவித்த நிலையில், தொழில்நுட்பத்திற்காக அஞ்ச வேண்டியதில்லை என்றும் எதைப் பயன்படுத்துவது, எதை விட்டுவிடுவது என்பதை நாம் கற்றுக் கொள்ளலாம் என்றும் விஷால் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193288
***
AD/SMB/KPG/KR
Release ID:
2195283
| Visitor Counter:
4