iffi banner

ஆடை அலங்காரத்தின் மூலம் திரையில் கதாப்பாத்திரங்களை உருவாக்குதல்: லக்கானியின் கதை சொல்லும் வித்தை

இந்தியா சர்வதேச திரைப்பட விழாவில் நடைபெற்ற 'ஆடை மற்றும் கதாபாத்திரங்கள்; சினிமாவின் ட்ரெண்ட்செட்டர்கள்' என்ற அமர்வில், புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ஏகா லக்கானி கலந்துகொண்டு, உடைகள் எவ்வாறு கதாபாத்திரங்களை வடிவமைக்கின்றன என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

சினிமாவில் ஆடை என்பது பேச்சுக்கு முன்னரே அதிகம் பேசுகிறது என்று இயக்குநர் ஜெய்பிரத் தேசாய் அமர்வைத் தொடங்கினார். ஏகா லக்கானி, மணிரத்னத்தின் 'ராவணன்' திரைப்படத்தில் சப்யசாச்சியுடன் பணிபுரிந்தது முதல் தனது 15 ஆண்டு காலப் பயணத்தைப் பகிர்ந்துகொண்டார். 'ராவணன்' திரைப்படம் அழகுடன் உணர்வும் இருக்க வேண்டும் என்று அவருக்குக் கற்றுக்கொடுத்தது.

மணிரத்னம் போன்ற இயக்குநர்களுடன், கதை எழுதும்போதே ஆடை வடிவமைப்பிற்கான ஒத்துழைப்பு தொடங்கிவிடுவதை ஏகா விளக்கினார். ஒரு கதாபாத்திரம் எப்படி ஆடை அணிகிறது என்பதைத் தான் புரிந்துகொண்டால், அக் கதாபாத்திரத்தின் நடத்தை பற்றி இயக்குநருக்கு இன்னும் அதிகமாகப் புரியும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆடை என்பது வெறும் அலங்காரம் அல்ல, அது கதைக்கு உயிர் கொடுக்கும் கருவி என்பதை ஏகா லக்கானி உறுதிப்படுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194902

***

(செய்தி வெளியீட்டு எண் 2194902)

AD/VK/KPG/KR


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2025, #AnythingForFilms and #FilmsKeLiyeKuchBhi. Tag us @pib_goa on Instagram, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


வெளியீட்டு அடையாள எண்: 2195246   |   Visitor Counter: 26