பத்திரிகை தகவல் அலுவலக அதிகாரிகள் அரசியல் சாசன உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்
அரசியல் சாசன தினத்தையொட்டி பனாஜியில் நடைபெற்ற 56-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் பத்திரிகை தகவல் அலுவலக அதிகாரிகள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். இதற்கு பத்திரிகை தகவல் அலுவலக தலைமை இயக்குநர் திருமதி ஸ்மிதா வட்ஸ் சர்மா தலைமை தாங்கினார். இந்திய மக்கள் தொடர்பு நிறுவன துணைவேந்தர் டாக்டர் பிரக்யா பாலிவால் கவுர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிகாரிகள் இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் முகவுரையை கூட்டாக வாசித்து அதன் மாண்புகளை கடைபிடிப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிபடுத்தினர்.
இந்தியர்களாகிய நாங்கள் இறையாண்மை, மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாக இந்தியாவை நிறுவி அனைத்து குடிமக்களையும் பாதுகாப்போம் என்று உறுதிபூண்டனர்.
ஊடகம் மற்றும் தகவல் ஒலிபரப்பு ஊழியர்களிடையே தேசிய ஒருமைப்பாடு, சிவில் கடமை, அரசியலமைப்புச் சட்ட பொறுப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளனர் என்பதை உறுதிபடுத்தும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்றது. பின்னர், தேசபக்தி முழக்கமான ஜெய் ஹிந்த் என்று கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194685
***
SS/IR/KPG/SH
Release ID:
2194958
| Visitor Counter:
5