இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் குஷ்பு, சுஹாசினி ஆகியோர் பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்
திரைப்படத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றி பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ள நடிகைகள் சுஹாசினி மணிரத்னம், குஷ்பு சுந்தர் ஆகியோர் நடிப்புக் கலை குறித்த ஆர்வமான உரையாடலில் கலந்து கொண்டனர். தாம் கமலஹாசனின் உறவினரா என்று மக்கள் தொடக்கக் காலத்தில் சந்தேகப்பட்டது குறித்து சிரித்துக் கொண்டே தமது உரையாடலை தொடங்கினார் சுஹாசினி அவர்கள்.
கன்னடப் படத்தில தாம் நடித்த போது ஒரு கடினமான வசனக் காட்சி சரிவர அமையாததால் அது 29 முறை படமாக்கப்பட்டதை விவரித்தார். அந்த வசனக் காட்சியை பார்வையாளர்களிடையே பேசியும் காட்டினார்.
நடிகை குஷ்பு தனது அனுபவம் குறித்து பேசிய போது, தாம் சிறப்பாக நடித்ததை உறுதி செய்ய தனக்கான உரையாடல்களையும் சக நடிகர்களின் உரையாடல்களையும் இந்தியில் எழுதிக் கொள்வது குறித்து குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192714
***
AD/IR/KPG/SE
रिलीज़ आईडी:
2194898
| Visitor Counter:
15