iffi banner

பனாஜியில் இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா பிரமாண்ட அணிவகுப்புடன் தொடங்கியது

கோவாவின் பனாஜியில் 56-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா வரலாற்றுச் சிறப்புமிக்க பிரமாண்ட அணிவகுப்புடன் தொடங்கியது. நவம்பர் 20 அன்று நடைபெற்ற இந்த அணிவகுப்பு அந்நகரின் டிபி சாலையில் திரைப்படத் தயாரிப்பு, பங்கேற்கும் மாநிலங்கள், மற்றும் கலாச்சாரக் குழுக்களின் அலங்கார ஊர்திகள், பழைய கோவா மருத்துவக் கல்லூரி கட்டடத்திலிருந்து கலா அகாடமி  வரை நடைபெற்றது.

கோவா அரசின் 12 ஊர்திகள் உட்பட 20-க்கும் மேற்பட்ட அலங்கார ஊர்திகள், இந்தியாவின் சினிமா பாரம்பரியம், பிராந்திய அடையாளம் ஆகியவற்றை எடுத்துரைத்துச் சென்றன. மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பகம் தயாரித்த பாரத் ஏக்  சூர் என்ற நாட்டுப்புற நிகழ்ச்சியில் 100-க்கும் அதிகமான கலைஞர்கள் கலந்து கொண்டு பாரம்பரிய நடனங்களை ஆடினார்கள். சோட்டா பீம், மோட்டு பட்லு, பிட்டூ பகனேபாஸ் போன்ற கதாபாத்திரங்களும் இதில் இடம் பெற்றன. இதனை 1000-க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192348

***

AD/IR/KPG/SE


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2025, #AnythingForFilms and #FilmsKeLiyeKuchBhi. Tag us @pib_goa on Instagram, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


வெளியீட்டு அடையாள எண்: 2194895   |   Visitor Counter: 17