இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு திரைப்பட விழா துவக்கம்
கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (ஐஎஃப்எஃப்ஐ) போது, வேவ்ஸ் திரைப்பட பஜார் மற்றும் ஐஎஃப்எஃப்ஐ ஆகியவை, எல்டிஐ மைண்ட் ட்ரீ-யுடன் இணைந்து, முதல் செயற்கை நுண்ணறிவு திரைப்பட விழா மற்றும் திரைப்பட செயற்கை நுண்ணறிவு ஹேக்கத்தானைத் தொடங்கின. இந்த முன்னோடி முயற்சி, திரைப்படங்களில் செயற்கை நுண்ணறிவை ஆராய்வதில் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியைக் குறிக்கிறது, இது படைப்பு வெளிப்பாட்டை அதிநவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கிறது.
இந்த விழாவில் 18 நாடுகளைச் சேர்ந்த 68 படங்கள், 5 சர்வதேச செயற்கை நுண்ணறிவு திரைப்பட விழாக்களிலிருந்து விருது பெற்ற திரைப்படத் தொகுப்புகள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து 14 தனிப்பட்ட திரைப்படத் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சமர்ப்பிப்புகளிலிருந்து, போட்டிப் பிரிவிற்கு 27 படங்களும், போட்டியற்ற காட்சிப் பிரிவுக்கு 4 படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டன.
செயற்கை நுண்ணறிவு திரைப்பட விழா போட்டியின் வெற்றியாளர்கள் வேவ்ஸ் திரைப்பட பஜாரின் நிறைவு விழாவில் அறிவிக்கப்பட்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194363
***
AD/BR/SE
Release ID:
2194872
| Visitor Counter:
4