பிரதமர் அலுவலகம்
ஸ்கைரூட்டின் இன்ஃபினிட்டி வளாகத்தை நவம்பர் 27-ம் தேதி பிரதமர் திறந்து வைக்கிறார்
இன்ஃபினிட்டி வளாகம் என்பது 2,00,000 சதுர அடி பணியிடத்தில் அமைந்துள்ள ஒரு அதிநவீன தொழிற்சாலையாகு ம்
பல ஏவுகணை வாகனங்களை வடிவமைத்தல், மேம்படுத்துதல், ஒருங்கிணைத்தல் மற்றும் சோதனை செய்தல் மூலம் இந்தியாவின் தனியார் விண்வெளி திறன்களை மேம்படுத்துவதற்கான வளாகம்
ஸ்கைரூட்டின் முதல் சுற்றுப்பாதை ராக்கெட்டான விக்ரம்-I ஐயும் பிரதமர் தொடங்கி வைப்பார்
प्रविष्टि तिथि:
25 NOV 2025 4:18PM by PIB Chennai
இந்திய விண்வெளி புத்தொழில் நிறுவனமான ஸ்கைரூட்டின் இன்ஃபினிட்டி வளாகத்தை பிரதமர் நவம்பர் 27-ம் தேதி காலை 11 மணிக்கு காணொலி மூலம் திறந்து வைப்பார். செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் செலுத்தும் திறன் கொண்ட ஸ்கைரூட்டின் முதல் சுற்றுப்பாதை ராக்கெட்டான விக்ரம்-I ஐயும் அவர் தொடங்கி வைப்பார்.
இந்த அதிநவீன தொழிற்சாலை, ஒவ்வொரு மாதமும் ஒரு சுற்றுப்பாதை ராக்கெட்டை உருவாக்கும் திறன் கொண்ட, பல ஏவுகணை வாகனங்களை வடிவமைத்தல், மேம்படுத்துதல், ஒருங்கிணைத்தல் மற்றும் சோதனை செய்வதற்கான சுமார் 2,00,000 சதுர அடி பணியிடத்தைக் கொண்டிருக்கும்.
ஸ்கைரூட் என்பது இந்தியாவின் முன்னணி தனியார் விண்வெளி நிறுவனமாகும். இது பவன் சந்தனா, பரத் டாக்கா ஆகியோரால் நிறுவப்பட்டது, இருவரும் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் முன்னாள் மாணவர்களும் இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானிகளாக இருந்து தொழில்முனைவோராக மாறியவர்களாவர். 2022 நவம்பரில், ஸ்கைரூட் அதன் துணை சுற்றுப்பாதை ராக்கெட்டான விக்ரம்-எஸ்-ஐ ஏவியது. இதன் மூலம், விண்வெளிக்கு ராக்கெட்டை ஏவிய முதல் இந்திய தனியார் நிறுவனமாக மாறியது.
தனியார் விண்வெளி நிறுவனங்களின் விரைவான எழுச்சி, கடந்த சில ஆண்டுகளில் அரசால் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தக்க சீர்திருத்தங்களின் வெற்றிக்கு இது ஒரு சான்றாகும், இது ஒரு நம்பிக்கையான மற்றும் திறமையான உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியாவின் தலைமையை வலுப்படுத்துகிறது.
***
AD/PVK/SH
(रिलीज़ आईडी: 2194420)
आगंतुक पटल : 6