இந்திய சர்வதேச திரைப்பட விழா செய்தியாளர் சந்திப்பில் ‘ஃபிராங்க்’ மற்றும் ‘லிட்டில் ட்ரபிள் கேர்ள்ஸ்’ திரைபடத்தின் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்கள் பற்றிய முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.
கோவாவில் நடைபெற்று வரும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் 'ஃபிராங்க்' படத்தின் தயாரிப்பாளர் இவோ ஃபெல்ட் மற்றும் 'லிட்டில் ட்ரபிள் கேர்ள்ஸ்' படத்தின் தயாரிப்பாளர் மிஹெக் செர்னெக் ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். வலி, தைரியம் மற்றும் மனித நேயம் போன்ற கருப்பொருள்களை மையமாகக் கொண்டு தாங்கள் உருவாக்கிய திரைப்படத்தின் நுணுக்கங்கள் குறித்து பகிர்ந்துகொண்டனர்.
‘ஃபிராங்க்’ திரைப்படம்:
'ஃபிராங்க்' திரைப்படம், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டு, அறிமுகமில்லாத ஊரில் வாழத் தள்ளப்படும் பால் என்ற 13 வயது சிறுவனின் கதையை கூறுகிறது. வாழ்க்கையின் குழப்பமான சூழலில், எதிர்பாராத விதமாக மாற்றுத்திறனாளி ஒருவர் அச்சிறுவனுக்கு நம்பிக்கை அளிக்கிறார். கண்ணுக்குத் தெரியாத மனக்காயங்களைச் சுமக்கும் குழந்தைகளின் நிலையை இப்படம் அமைதியாக ஆராய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இறுதியாக, இத்தகைய கதைகள் படக்குழுவினரிடையே ஏற்படுத்தும் தாக்கம் குறித்துப் பேசிய அவர், "ஒரு திரைப்படம் நம்மை மாற்றும் வல்லமை கொண்டது. அது நம் வாழ்க்கையாகவே மாறி, நம் நம்பிக்கைகளை வடிவமைக்கிறது," என்று கூறினார்.
'லிட்டில் ட்ரபிள் கேர்ள்ஸ்' திரைப்படம்:
'லிட்டில் ட்ரபிள் கேர்ள்ஸ்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் மிஹெக் செர்னெக், இப்படத்தின் உருவாக்கம் மற்றும் அதன் பின்னணி குறித்த முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். ஒரு பெண்ணின் மனதின் ஆழ்ந்த தேடலை மையமாகக் கொண்ட இப்படம், ஸ்லோவேனியா நாட்டின் கலாச்சாரம் மற்றும் இசைப் பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார்.
நான்கு வாரங்கள் தேவாலயங்களில் தங்கி, அங்குள்ள இசைக்குழுவின் பாடல்களை நேரடியாகப் பதிவு செய்ததாகவும், குகை மற்றும் காடுகள் போன்ற இடங்கள் வெறும் படப்பிடிப்பு இடங்களாக மட்டுமில்லாமல் படத்தின் கதாபாத்திரங்களாகவே மாறியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். ஸ்லோவேனியாவின் பாரம்பரிய ஒழுக்கத்தையும், இளைஞர்களின் மனநிலையையும் இப்படம் இணைப்பதாக அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194061
***
SS/SE/SH
Release ID:
2194277
| Visitor Counter:
4