பிரதமர் அலுவலகம்
உலக குத்துச்சண்டை கோப்பை இறுதிப் போட்டிகளில் சிறப்பான சாதனைகளுக்காக இந்திய விளையாட்டு வீரர்களுக்குப் பிரதமர் பாராட்டு
Posted On:
24 NOV 2025 12:06PM by PIB Chennai
உலக குத்துச்சண்டை கோப்பை இறுதிப் போட்டி 2025-ல், இந்திய விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு, சாதனை படைத்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா, 9 தங்கம் உட்பட மொத்தம் 20 பதக்கங்களை வென்று, இதுவரை இல்லாத அளவில் மிக அதிகமான பதக்கங்களைக் குவித்து, இந்திய குத்துச்சண்டைக்கு ஒரு வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளது என்பதைப் பிரதமர் எடுத்துரைத்தார். இந்த வெற்றியானது நாட்டின் குத்துச்சண்டை வீரர்களின் உறுதிப்பாடு, மன உறுதி மற்றும் இடைவிடாத ஊக்கத்தால் கிடைத்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி “சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நமது அசாதாரணமான விளையாட்டு வீரர்கள் உலக குத்துச்சண்டை கோப்பை இறுதிப் போட்டி 2025-ல், குறிப்பிடத்தக்க, செயல்திறனை வெளிப்படுத்தி சாதனைகளை படைத்துள்ளனர்! அவர்கள் 9 தங்கம் உட்பட, இதுவரை கண்டிராத அளவுக்கு 20 பதக்கங்களை நாட்டிற்குக் கொண்டு வந்துள்ளனர். இது நமது குத்துச்சண்டை வீரர்களின் விடா முயற்சியாலும் மன உறுதியினாலும் விளைந்தது. அவர்களுக்கு வாழ்த்துகள். அவர்களின் எதிர்கால முயற்சிகள் சிறக்க எனது நல்வாழ்த்துகள்," என்று குறிப்பிட்டுள்ளார்.
***
(Release ID: 2193412)
SS/VK/RK
(Release ID: 2193555)
Visitor Counter : 7