இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் புத்தக வெளியீட்டுப் பிரிவின் ‘லெஜெண்ட்ஸ் ஆஃப் இண்டியன் சில்வர் ஸ்க்ரீன்’ புத்தகம் வெளியிடப்பட்டது
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின், புத்தக வெளியீட்டுப் பிரிவின் (டிபிடி) சமீபத்திய வெளியீடான ‘லெஜெண்ட்ஸ் ஆஃப் இண்டியன் சில்வர் ஸ்க்ரீன்’ புத்தகம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (ஐஎஃப்எஃப்ஐ) வெளியிடப்பட்டது. வெளியீட்டுப் பிரிவின் முதன்மை தலைமை இயக்குநர் திரு. பூபேந்திர கைந்தோலா மற்றும் புகழ்பெற்ற கொங்கனி திரைப்படத் தயாரிப்பாளர் ராஜேந்திர தலாக் ஆகியோர் இதை வெளியிட்டனர்.
"இந்திய திரைப்படத்தின் மிக உயர்ந்த விருதாகக் கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருதை வென்ற ஜாம்பவான்களின் பயணத்தை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்" என்று தனது தொடக்க உரையில், திரு கைந்தோலா தெரிவித்தார். இந்தப் புத்தகத்தில் தேவிகா ராணி, சத்யஜித் ரே, வி. சாந்தாராம், லதா மங்கேஷ்கர் போன்ற பிரபலங்கள் உட்பட 23 பேர் இடம்பெற்றுள்ளனர்.
"இந்தப் புத்தகம் 17 வெவ்வேறு எழுத்தாளர்களால் எழுதப்பட்ட 23 கட்டுரைகளின் தொகுப்பாகும். அதன் தொகுப்பாசிரியர் சஞ்சித் நர்வேகர் ஆவார். இரண்டு தாதாசாகேப் பால்கே விருது பெற்ற மிதுன் சக்ரவர்த்தி மற்றும் ஆஷா பரேக் ஆகியோர் புத்தகத்திற்கு முன்னுரை எழுதியிருப்பது, இந்த வெளியீட்டின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம்," என்று அவர் மேலும் கூறினார்.
"தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் புத்தக வெளியீட்டுப் பிரிவு, இதுபோன்ற முக்கியமான விஷயங்களை அணுகக்கூடிய விலையில் அச்சிடும் பொறுப்பைப் பெற்றுள்ளது. இந்த புத்தகம் ஆராய்ச்சியாளர்களுக்கும், திரைப்படங்களை அவற்றின் கவர்ச்சிகரமான மேற்பரப்புக்கு அப்பால் புரிந்து கொள்ள முற்படும் எவருக்கும் மிகவும் முக்கியமானது" என்று திரு கைந்தோலா கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192954
***
AD/RB/RJ
रिलीज़ आईडी:
2193278
| Visitor Counter:
16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
Kannada
,
English
,
Konkani
,
Marathi
,
हिन्दी
,
Gujarati
,
Telugu
,
Assamese
,
Urdu
,
Bengali