படைப்பாளிகளுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையிலான பாலமாக வேவ்ஸ் பஜார் அமைந்துள்ளது – மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்
தெற்காசியாவின் உலகளாவிய திரைப்பட சந்தையான வேவ்ஸ் ஃபிலிம் பஜார் நிகழ்வு, இன்று (20-11-2025) கோவாவின் பன்ஜிமில் உள்ள தொடங்கியது. இதில், திரைப்பட தயாரிப்பாளர்கள், படைப்பாளிகள், உலகளாவிய கலைத்துறைப் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் மதிப்புமிக்க விழாவான கோவா இந்திய சர்வதேச திரைப்பட விழாவுடன் இணைந்து இந்த வேவ்ஸ் ஃபிலிம் பஜார் நடத்தப்படுகிறது.
இது திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், படைப்பாளிகள், விற்பனை முகவர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோரை இணைக்கும் உலகளாவிய சந்திப்பாக இது திகழ்கிறது. இந்த வேவ்ஸ் ஃபிலிம் பஜார் 2025 நவம்பர் 20 முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்துப் பேசிய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், இந்தியா உலகளாவிய திரைப்படத் தயாரிப்பு மையமாக உருவெடுக்க வேண்டும் என்பது பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை என்று கூறினார். இந்த வேஸ் ஃபிலிம் பஜார் நிகழ்வு படைப்பாளர்களுக்கும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் இடையிலான பாலமாகத் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார். இளம் படைப்பாளிகளையும் புதிய கதைகளைக் கொண்டுள்ளவர்களையும் ஆதரிப்பதற்கான தளமாக இது செயல்படுகிறது என்று அவர் தெரிவித்தார். இந்த ஆண்டு வேவ்ஸ் பஜாரில் 124 புதிய படைப்பாளிகள் பங்கேற்றுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். இந்திய கலாச்சாரத்தை உலகிற்கு எடுத்துச் செல்வதில் இது முக்கியப் பங்கு வகிப்பதாகவும் திரு எல். முருகன் கூறினார்.
தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, தமது தொடக்க உரையில், வேவ்ஸ் ஃபிலிம் பஜார், கலையை வணிகத்துடன் இணைப்பதாகத் தெரிவித்தார். இது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படைப்பாளர்களை இணைத்து, இந்தியாவை உலகளாவிய கூட்டுத் திரைப்பட தயாரிப்புக்கான மையமாக மாற்றுகிறது என்று அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கெளரவ விருந்தினராக கலந்து கொண்டு பேசிய, கொரிய குடியரசின் தேசிய அவையின் உறுப்பினர் திருமதி ஜேவோன் கிம், இந்தியாவிற்கும் கொரியாவிற்கும் இடையில் பொழுதுபோக்குத் துறையில் அதிக ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்தார். வந்தே மாதரம் பாடலை அவர் ஆத்மார்த்தமாகப் பாடினார். இது நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்களின் கைதட்டல்களையும் பாராட்டுதல்களையும் பெற்றது.
தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு பிரபாத் விழாவில் நன்றியுரை ஆற்றினார். தொடக்க விழாவில் இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவுக்கான இயக்குநரும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளருமான திரு சேகர் கபூர், நடிகர்கள் திரு நந்தமுரி பாலகிருஷ்ணா திரு அனுபம் கெர், வேவ்ஸ் பஜாரின் ஆலோசகர் ஜெரோம் பைலார்ட், ஆஸ்திரேலிய திரைப்பட இயக்குநர் கார்த் டேவிஸ், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழக்த்தின் மேலாண்மை இயக்குநர் திரு பிரகாஷ் மக்தூம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192106
(Release ID: 2192106)
VL/PLM/KPG/SH
Release ID:
2192271
| Visitor Counter:
10
Read this release in:
Punjabi
,
Telugu
,
Khasi
,
English
,
Urdu
,
Konkani
,
Marathi
,
हिन्दी
,
Gujarati
,
Kannada
,
Malayalam