விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விதைகள் வரைவு மசோதா 2025 குறித்த கருத்துகளை அரசு வரவேற்கிறது

Posted On: 13 NOV 2025 2:48PM by PIB Chennai

விதைகள் வரைவு மசோதா 2025-ஐ மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை தயாரித்துள்ளது. தற்போதைய விதைகள் சட்டம் 1966 மற்றும் விதைகள் (கட்டுப்பாடு) ஆணை 1983-க்கு மாற்றாக இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது.

விதை மசோதா, 2025 வரைவு, சந்தையில் கிடைக்கும் விதைகள் மற்றும் நடவுப் பொருட்களின் தரத்தை ஒழுங்குபடுத்துதல், விவசாயிகள் குறைந்த விலையில் உயர்தர விதைகளைப் பெறுவதை உறுதி செய்தல், போலியான, தரமற்ற விதைகளின் விற்பனையைத் தடுத்தல், விவசாயிகளை இழப்புகளிலிருந்து பாதுகாத்தல், புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல், உலகளாவிய விதை வகைகளுக்கான அணுகலை ஊக்குவித்தல், விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாத்தல், விதை விநியோக  அமைப்புகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இம்மசோதா சிறிய குற்றங்களை குற்றமற்றதாகவும், எளிதாக வர்த்தகம் செய்வதை ஊக்குவிக்கவும், விதிமுறைகளை மீறுவதற்கு கடும் நடவடிக்கை எடுக்கவும் வகை செய்கிறது. இம்மசோதா குறித்த கருத்துகளை சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் உறுப்பினர்கள்  jsseeds-agri[at]gov[dot]in  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 2025 டிசம்பர் 11-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189600   

***

SS/IR/KPG/KR


(Release ID: 2189727) Visitor Counter : 7