ஐஎஃப்எஃப்ஐ 2025-ல் இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து தலைசிறந்த ஏழு அறிமுக படைப்புகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன
சர்வதேச திரைப்படத் துறையில் சிறந்த புதிய திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில், 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐஎஃப்எஃப்ஐ) 2025-ல் சிறந்த அறிமுக திரைப்படங்களின் இயக்குநருக்கான விருது ஐந்து சர்வதேச மற்றும் இரண்டு இந்திய திரைப்படங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
வெற்றியாளருக்கு மதிப்புமிக்க வெள்ளி மயில், ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். புகழ்பெற்ற இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா தலைமையில், கிரேம் கிளிஃபோர்ட் (திரைப்பட தொகுப்பாளர் மற்றும் இயக்குநர், ஆஸ்திரேலியா), கதரினா ஷுட்லர் (நடிகர், ஜெர்மனி), சந்திரன் ருட்னம் (திரைப்படத் தயாரிப்பாளர், இலங்கை) மற்றும் ரெமி அடெஃபரசின் (ஒளிப்பதிவாளர், இங்கிலாந்து) ஆகியோர் அடங்கிய நடுவர் குழு வெற்றியாளரைத் தீர்மானிக்கும்.
இந்த விருது சிறந்த படைப்புகளை எடுத்துக்காட்டுவதுடன், உலகம் முழுவதிலுமிருந்து வரும் அடுத்த தலைமுறை கலைஞர்களின் திரைப்பட பார்வையை வெளிப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2188117
***
SS/BR/RK
Release ID:
2189300
| Visitor Counter:
8
Read this release in:
Assamese
,
Malayalam
,
English
,
Gujarati
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Punjabi
,
Telugu
,
Kannada