பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தான் மாநிலம் பலோடி மாவட்டத்தில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 02 NOV 2025 10:17PM by PIB Chennai

ராஜஸ்தான் மாநிலம் பலோடி மாவட்டத்தில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் நலமடைய இறைவனை பிரார்த்திப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

ராஜஸ்தான் மாநிலம் பலோடியில் நேரிட்ட சாலை விபத்தில் பலர் உயிரிழந்துள்ளது, மிகுந்த மனவேதனை அளிப்பதாக உள்ளது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீது எனது சிந்தனை உள்ளது. இந்த இக்கட்டான தருணத்தில் இருந்து அவர்கள் மீண்டுவர வேண்டும். இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரண உதவி வழங்கப்படும்.”

***

(Release Id: 2185652)

SS/SV/LDN/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2188746) வருகையாளர் எண்ணிக்கை : 22