கூட்டுறவு அமைச்சகம்
2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒவ்வொரு நகரத்திலும் அடுத்த 5 ஆண்டுகளில் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் நிறுவப்படும்: உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா
प्रविष्टि तिथि:
10 NOV 2025 5:46PM by PIB Chennai
நாட்டில் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒவ்வொரு நகரத்திலும் அடுத்த 5 ஆண்டுகளில் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் நிறுவப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் இன்று நடைபெற்ற நகர்ப்புற கூட்டுறவு கடன் சங்கம் தொடர்பான சர்வதேச மாநாட்டில் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு அவர் உரையாற்றினார். சர்வதேச கூட்டுறவு ஆண்டை குறிக்கும் வகையில், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்கள் சார்பில் இந்த கூட்டுறவு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில் நாட்டில் உள்ள நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கள் முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருப்பதாக கூறினார். கூட்டுறவுத் துறையை மேம்படுத்துவதற்கான கொள்கைகள் வகுப்பது, தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவிததார். நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை விரிவாக்கம் செய்வதற்கு இந்த மாநாட்டின் தில்லி பிரகடனம் உதவிடும் என்று அவர் கூறினார்.
கூட்டுறவு வங்கிகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள், டிஜிட்டல் முறையிலான கடன் உதவிகள் உள்ளிட்ட வசதிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான மொபைல் செயலி மூலம் சிறுநகரங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கான வசதிகள் மேம்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கூட்டுறவுத் துறையில் ஒவ்வொரு நிலையிலும், சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது என பிரதமர் திரு மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு முக்கிய கொள்கை முடிவுகளை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். கூட்டுறவுத் துறையை விரிவாக்கம் செய்வதற்கும், அதில் உள்ள சவால்களுக்கு தீர்வு காணவும் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கான மாதிரி விதிமுறைகளை ஏற்றுக் கொள்வதற்கு அனைத்து மாநில அரசுகளும் முன்வந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
மத்திய கூட்டுறவு அமைச்சகம் நான்கு இலக்குகளை நிர்ணயித்து உள்ளதாகவும் அவர் கூறினார். முதலாவதாக, இளம் தலைமுறையினரை கூட்டுறவு இயக்கத்தில் இணைப்பதற்கான நடவடிக்கையாகும். இரண்டாவதாக, அனைத்து வகையான சவால்களையும் எதிர்கொள்ளும் திறன் கொண்ட கூட்டுறவு சங்கங்களை தயார் செய்வதாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188432
****
SS/SV/LDN/SH
(रिलीज़ आईडी: 2188560)
आगंतुक पटल : 36