பிரதமர் அலுவலகம்
புத்தரின் புனித நினைவுச் சின்னங்களுக்கு சிறப்பான வரவேற்பு - பூடான் அரசு தலைமைக்கும் அந்நாட்டு மக்களுக்கும் பிரதமர் நன்றி
प्रविष्टि तिथि:
09 NOV 2025 3:43PM by PIB Chennai
இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட புத்தரின் புனித நினைவுச் சின்னங்களுக்கு அளிக்கப்பட்ட சிறந்த மரியாதைக்காகவும், வரவேற்புக்காகவும் பூடான் அரசு தலைமைக்கும் அந்நாட்டு மக்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இந்த நினைவுச் சின்னங்கள் அமைதி, இரக்கம், நல்லிணக்கம் ஆகியவை தொடர்பான காலத்தால் அழியாத செய்தியைக் குறிப்பவை என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். புத்தரின் போதனைகள் இரு நாடுகளின் பகிரப்பட்ட ஆன்மீக பாரம்பரியத்திற்கு இடையேயான புனிதமான இணைப்பாகும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட புத்தரின் புனித நினைவுச்சின்னங்களுக்கு அளிக்கப்பட்ட சிறந்த மரியாதைக்காகவும், வரவேற்புக்காகவும் பூடான் மக்களுக்கும் அந்நாட்டின் அரசு தலைமைக்கும் மனமார்ந்த நன்றிகள்.
இந்த நினைவுச்சின்னங்கள் அமைதி, இரக்கம், நல்லிணக்கம் ஆகியவை தொடர்பான காலத்தால் அழியாத செய்தியைக் குறிக்கின்றன. புத்தரின் போதனைகள் நமது இரு நாடுகளின் பகிரப்பட்ட ஆன்மீக பாரம்பரியத்திற்கு இடையேயான ஒரு புனிதமான இணைப்பாகும்."
***
(Release ID: 2188021)
SS/PLM/RJ
(रिलीज़ आईडी: 2188045)
आगंतुक पटल : 38
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam