தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
12-வது பெரும் திரைப்பட உச்சி மாநாடு (பிக் பிக்சர் சம்மிட்) 2025-ல் வேவ்ஸ் பசாருடன் இணைந்து உலகளாவிய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறை முதலீட்டாளர்கள் சந்திப்பை சிஐஐ அறிவித்துள்ளது
Posted On:
07 NOV 2025 4:10PM by PIB Chennai
மும்பையில் 2025 டிசம்பர் 01, 02 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள 12-வது பெரும் திரைப்பட உச்சி மாநாடு (பிக் பிக்சர் சம்மிட்) 2025-ல் உலகளாவிய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறை முதலீட்டாளர்கள் சந்திப்பை இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) அறிவித்துள்ளது. வேவ்ஸ் பசாருடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ள இந்த முன்முயற்சி, அடுத்த கட்ட வளர்ச்சிக்கு ஊக்கமளிக்க நிறுவனங்களின் முதலீட்டை ஒருங்கிணைப்பதன் மூலம், இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறையின் முழு ஆற்றலை வெளிக்கொண்டு வருவதை நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த முதலீட்டாளர் சந்திப்பில் எலாரா கேபிடல் முதலீட்டு பங்குதாரராகவும், விட்ரினா உலகளாவிய நிதி சார்ந்த பங்குதாரராகவும் இருக்கும் என்று சிஐஐ அறிவித்துள்ளது. சிஐஐ பெரும் திரைப்பட உச்சி மாநாடு என்பதன் மையப்பொருள், செயற்கை நுண்ணறிவு சகாப்தம் : படைப்பாக்கத்தையும், வணிகத்தையும் இணைத்தல் என்பதாகும். இந்தியாவின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறையின் வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான வரைபடத்தை தயாரிக்க அரசு மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த தலைவர்களை இது ஒருங்கிணைக்கும். இந்த உச்சிமாநாடு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறை வளமான வரலாற்றை கொண்டுள்ள போதும் பெருமளவு தனியாரின் ஆர்வம் மற்றும் முதலீட்டுக்காக பாடுபட்டு வருகிறது. இதில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான பெரிய நடவடிக்கையாக இந்த முதலீட்டாளர் சந்திப்பு இருக்கும் என்று சிஐஐ உலகளாவிய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறை முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டின் தலைவர் திரு ஷிபாஷிஷ் சர்க்கார் தெரிவித்தார். முதல் முறையாக உலகளாவிய முதலீட்டாளர்களையும், இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து நேரடி சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதனை ஒரு பயணத்தின் தொடக்கமாக தாம் காண்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக தொழில்துறை தலைவர்கள், விற்போர், வாங்குவோர், இணைத் தயாரிப்பு வாய்ப்புகளுக்கான உள்ளடக்கம் உருவாக்குவோர் ஆகியோர் ஒரே இடத்தில் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2187367
***
SS/SMB/AG/RJ
(Release ID: 2187573)
Visitor Counter : 6