பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத் மாநிலம், கெவாடியாவில் சர்தார் படேலின் 150-வது பிறந்த தினத்தையொட்டி ரூ.1219 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார்

प्रविष्टि तिथि: 30 OCT 2025 11:07PM by PIB Chennai

குஜராத் மாநிலம், கெவாடியாவில் சர்தார் படேலின் 150-வது பிறந்த தினத்தையொட்டி ரூ.1219 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். விருந்தோம்பல் மாவட்டத்தின் முதல் கட்டமாக பகவான் பிர்சா முண்டாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட தனித்துவ மையமான, அரசு பாதுகாப்பு படை மற்றும் சர்தார் சரோவர் நர்மதா நிகாம் நிறுவன ஊழியர் குடியிருப்பு வளாகமான பிர்சா முண்டா பவன், போன்சாய் தோட்டம் ஆகியவை இந்த திட்டங்களில் அடங்கும்.

கெவாடியாவில் மின்சார பேருந்துகளையும் திரு மோடி கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த பகுதிக்கு வருகை தரும் மக்களுக்கு வசதியான நிலையான போக்குவரத்து வசதிகளை இந்த முன்முயற்சி உறுதி செய்யும்.

சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்தியாவின் இரும்பு மனிதருக்கு மரியாதை செலுத்தும் விதமாக சிறப்பு நினைவு நாணயம் ஒன்றையும், அஞ்சல்தலை ஒன்றையும் பிரதமர் வெளியிட்டார்.

பிரதமர் தமது பயணத்தின் போது கெவாடியாவில் சர்தார் வல்லபாய் படேலின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்தார். இவர்களுடன் கலந்துரையாடுவது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறிய அவர், நாட்டிற்கு சர்தார் படேலின் மதிப்புமிகு பங்களிப்பை நினைவுகூர்ந்தார்.

கெவாடியாவில் சர்தார் படேலின் உத்வேகமளிக்கும் வாழ்க்கையையும், பாரம்பரியத்தையும் சித்தரித்த கலைநிகழ்ச்சியிலும் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தனித்தனியான பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“கெவாடியாவின் உள்கட்டமைப்பிற்கு ஊக்குவிப்பு!

இன்று மாலை ரூ.1219 கோடி மதிப்புள்ள முக்கிய வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன, நிறைவடைந்த திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

பகவான் பிர்சா முண்டாவிற்கு மரியாதை செலுத்தும் தனித்துவ மையமான பிர்சா முண்டா பவன்.

அரசு பாதுகாப்பு படை மற்றும் சர்தார் சரோவர் நர்மதா நிகாம் நிறுவன ஊழியர் குடியிருப்பு வளாகம்.

விருந்தோம்பல் மாவட்டத்தின் முதல்கட்டம்.

போன்சாய் தோட்டம்”

***

(Release ID: 2184422)

SS/SMB/AS/AG


(रिलीज़ आईडी: 2187289) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Manipuri , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam