பிரதமர் அலுவலகம்
மனதின் குரல் நிகழ்ச்சியின் 127-வது அத்தியாயத்தின் முக்கிய அம்சங்களை பிரதமர் பகிர்ந்து கொண்டார்.
இடுகை இடப்பட்ட நாள்:
26 OCT 2025 8:19PM by PIB Chennai
மனதின் குரல் நிகழ்ச்சியின் 127-வது அத்தியாயத்தின் முக்கிய அம்சங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பல்வேறு இடுகைகளில் அவர் குறிப்பிட்டதாவது:
"சத் திருவிழா என்பது கலாச்சாரம், இயற்கை மற்றும் சமூக ஒற்றுமையின் பிரதிபலிப்பாகும். நீங்கள் இந்தியாவிலோ, உலகின் எந்த பகுதியில் இருந்தாலும், வாய்ப்பு கிடைத்தால் சத் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு, வாய்ப்பு கிடைத்தால் அதன் தனித்துவமான அனுபவத்தைப் பெறுமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.”
#MannKiBaat"
"சத்தீஸ்கரின் அம்பிகாபூரில் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்வதற்கான தனித்துவமான முயற்சியாக இருந்தாலும் சரி, பெங்களூருவில் கிணறுகள் மற்றும் ஏரிகளை புதுப்பிக்கும் பிரச்சாரமாக இருந்தாலும் சரி, நாம் உறுதியாக இருந்தால், எந்த மாற்றமும் கடினம் அல்ல என்பதற்கு இவை ஊக்கமளிக்கும் எடுத்துக்காட்டுகள்.
#MannKiBaat"
"'வந்தே மாதரம்' பாடலில் பொதிந்துள்ள அற்புதமான உணர்வு, இந்தியத் தாயின் குழந்தைகளாகிய நமது பொறுப்புகளை நமக்கு நினைவூட்டுகிறது. நவம்பர் 7-ம் தேதி, 'வந்தே மாதரம்' 150-வது ஆண்டின் கொண்டாட்டத்தில் நாம் இணைகிறோம். இதற்காக எனது சக குடிமக்களிடம் ஒரு சிறப்பு வேண்டுகோளை நான் முன்வைக்கிறேன்...
#VandeMatram150
#MannKiBaat”
"நமது கலாச்சாரம் மற்றும் சமூக ஊடக உலகின் மூலம் சமஸ்கிருதம் இன்று புதிய எழுச்சியைப் பெறுவதைப் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த திசையில் நமது இளைஞர்கள் பலர் மேற்கொண்டு வரும் சுவாரஸ்யமான முயற்சிகள் மிகவும் ஊக்கமளிக்கின்றன."
#MannKiBaat
“இந்திய நாய் இனங்களை ஊக்குவிப்பதற்கும், அவற்றின் பயிற்சியில் கவனம் செலுத்துவதற்கும், முக்கிய நடவடிக்கைகளில் அவற்றை ஈடுபடுத்துவதற்கும் பிஎஸ்எஃப் மற்றும் சிஆர்பிஎஃப் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டுகிறேன்.
@BSF_India
@crpfindia
#MannKiBaat”
"சர்தார் படேலின் 150-வது பிறந்தநாளை நாம் கொண்டாடுவதால் இந்த ஆண்டு அக்டோபர் 31, சிறப்பு வாய்ந்த தினமாக இருக்கும். உங்கள் அனைவரையும், குறிப்பாக எனது இளம் நண்பர்களை, இந்தியா முழுவதும் 'ஒற்றுமைக்கான ஓட்டம்' நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்.
#MannKiBaat"
“கோராபுட் காபி மிகவும் சுவையாக இருக்கிறது. இது ஒடிசாவின் பெருமை!
#MannKiBaat”
“இந்தியாவின் காபி மிகச் சிறந்தது .
இது இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது, உலகத்தால் விரும்பப்படுகிறது!
#MannKiBaat”
“பெங்களூருவில் நிலையான வாழ்க்கையை மேலும் மேம்படுத்துவதற்கான பாராட்டத்தக்க முயற்சியின் சிறப்பம்சங்கள்.
#MannKiBaat”
"தாய்லாந்து ராஜமாதா அரசி சிரிகிட் மறைவால் நான் மிகவும் வேதனையடைந்தேன். அவர் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் ஆற்றிய பொதுச்சேவை தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும். இந்த கடினமான துக்க நேரத்தில் மன்னர், அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தாய்லாந்து மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்."
“துணிச்சலான கோமரம் பீமுக்கு அஞ்சலி செலுத்தி, காலனித்துவ ஆட்சியாளர்களையும் அடக்குமுறை நிஜாமையும் எதிர்த்துப் போராட அவர் ஆற்றிய மகத்தான முயற்சிகளை நினைவு கூர்ந்தேன்.
#MannKiBaat”
"நவம்பர் 15-ம் தேதி பிர்சா முண்டாவின் பிறந்தநாளை பழங்குடியின கௌரவ தினமாக நாம் கொண்டாடுகிறோம். பழங்குடி சமூகங்களின் உரிமைகளுக்கான அவரது போராட்டமும் துணிச்சலும் வரும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்.
#MannKiBaat"
***
(Release ID: 2182705)
SS/BR/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2187260)
வருகையாளர் எண்ணிக்கை : 27
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
Telugu
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada