பிரதமர் அலுவலகம்
வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டையொட்டி ஓராண்டு கொண்டாட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
Posted On:
06 NOV 2025 2:47PM by PIB Chennai
தேசிய பாடல் வந்தே மாதரம் இயற்றப்பட்டு 150-வது ஆண்டுகள் ஆனதையொட்டி ஓராண்டு கால கொண்டாட்டத்தை பிரதமர்
திரு நரேந்திர மோடி புதுதில்லி இந்திரா காந்தி உள் விளையாட்டரங்கில் 2025 நவம்பர் 07 அன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிவைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் நினைவு அஞ்சல் தலையையும், நாணயத்தையும் அவர் வெளியிடுகிறார். இந்திய சுதந்திர இயக்கத்திற்கு ஊக்கமளித்து நாட்டின் பெருமையையும், ஒற்றுமையையும் தூண்டிய இப்பாடலின் 150 ஆண்டுகளை நினைவுகூறும் கால கொண்டாட்டங்கள் 2025 நவம்பர் 07 முதல், 2026 நவம்பர் 07 வரை நடைபெறுவதன் அடையாளமாக இந்நிகழ்ச்சி முறைப்படி தொடங்கப்படுகிறது.
இந்த கொண்டாட்டங்களில், காலை 9:50 மணியளவில் பொது இடங்களில், முக்கிய நிகழ்ச்சியுடன் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களும் பங்கேற்கும் வகையில், "வந்தே மாதரம்" பாடலின் முழுப் பதிப்பும் பெருந்திரளுடன் பாடப்படும்.
2025-ம் ஆண்டு வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகளைக் குறிக்கிறது. பங்கிம்சந்திர சட்டர்ஜி எழுதிய நமது தேசியப் பாடலான "வந்தே மாதரம்", 1875-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி அக்ஷய நவமி அன்று எழுதப்பட்டது. வந்தே மாதரம் முதன்முதலில் இலக்கிய பத்திரிகையான பங்கதர்ஷனில் அவரது ஆனந்தமத் நாவலின் ஒரு பகுதியாக வெளியானது. தாய்நாட்டை வலிமை, செழுமை மற்றும் தெய்வீகத்தின் உருவகமாக கூறும் இந்தப் பாடல், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் சுயமரியாதையின் விழிப்புணர்வை கவிதை ரீதியாக வெளிப்படுத்தியது. இது விரைவில் தேச பக்தியின் நீடித்த அடையாளமாக மாறியது.
***
(Release ID: 2186906 )
SS/IR/AG/SH
(Release ID: 2187059)
Visitor Counter : 32
Read this release in:
Assamese
,
English
,
Khasi
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam