பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அக்டோபர் 29 ஆம் தேதி பிரதமர் மும்பைக்கு பயணம் மேற்கொள்கிறார் இந்திய கடல்சார் வாரம் 2025-ல் உலகளாவிய கடல்சார் தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்திற்கு பிரதமர் தலைமை தாங்குவார்

இடுகை இடப்பட்ட நாள்: 27 OCT 2025 10:01PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 அக்டோபர் 29 அன்று மும்பைக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். மாலை சுமார் 4:00 மணியளவில், மும்பையில் உள்ள நெஸ்கோ கண்காட்சி மையத்தில் நடைபெறும் இந்திய கடல்சார் வாரம் 2025-ல் கடல்சார் தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றுவார் மற்றும் உலகளாவிய கடல்சார் தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்திற்குத் தலைமை தாங்குவார்.

2025 ஆம் ஆண்டு இந்திய கடல்சார் வாரத்தின் முதன்மை நிகழ்வான உலகளாவிய கடல்சார் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றம், உலகளாவிய கடல்சார் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை ஒன்றிணைத்து, உலகளாவிய கடல்சார் சூழலியலின்  எதிர்காலம் குறித்து ஆலோசிக்கும். இந்த மன்றம் நிலையான கடல்சார் வளர்ச்சி, மீள் விநியோகச் சங்கிலிகள், பசுமை கப்பல் போக்குவரத்து மற்றும் உள்ளடக்கிய கடல்சார் பொருளாதார உத்திகள் குறித்த உரையாடலுக்கான முக்கிய தளமாக செயல்படும்.

பிரதமரின் பங்கேற்பு, கடல்சார் அமிர்த கால தொலைநோக்குப் பார்வை 2047 உடன் இணைக்கப்பட்ட ஒரு லட்சியமிக்க, எதிர்காலம் சார்ந்த கடல்சார் மாற்றத்திற்கான அவரது ஆழ்ந்த அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. துறைமுகம் சார்ந்த மேம்பாடு, கப்பல் போக்குவரத்து மற்றும் கப்பல் கட்டுதல், தடையற்ற தளவாடங்கள் மற்றும் கடல்சார் திறன் மேம்பாடு ஆகிய நான்கு உத்திசார் தூண்களில் கட்டமைக்கப்பட்ட இந்த நீண்டகால தொலைநோக்கு, இந்தியாவை உலகின் முன்னணி கடல்சார் சக்திகளில் ஒன்றாக நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள், கப்பல் கட்டுதல், கப்பல் சுற்றுலா மற்றும் கடல்சார் பொருளாதார நிதி ஆகியவற்றில் முன்னணி பங்குதாரர்களை ஒன்றிணைத்து, இந்த தொலைநோக்கை செயல்பாட்டுக்குக் கொண்டுவர இந்திய அரசின் முதன்மையான உலகளாவிய தளமாக இந்திய கடல்சார் வாரம் 2025 செயல்படுகிறது.

"பெருங்கடல்களை ஒன்றிணைத்தல், ஒரு கடல்சார் பார்வை" என்ற கருப்பொருளின் கீழ், 2025 அக்டோபர் 27 முதல் 31 வரை நடைபெறும இந்திய கடல்சார் வாரம் 2025, உலகளாவிய கடல்சார் மையமாகவும், கடல்சார் பொருளாதாரத்தில் முன்னணியில் இருப்பதற்கான இந்தியாவின் உத்திசார் வரைபடத்தை வெளிப்படுத்தும். இந்திய கடல்சார் வாரம் 2025-இல், 85-க்கும் மேற்பட்ட நாடுகள்  பங்கேற்கும். இதில் 1,00,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 500-க்கும் அதிகமான கண்காட்சியாளர்கள் மற்றும் 350-க்கும் அதிகமான சர்வதேச பேச்சாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

 

(Release ID: 2183155)

***

SS/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2186677) வருகையாளர் எண்ணிக்கை : 24