பிரதமர் அலுவலகம்
சுற்றுச்சூழலுடன் இயைந்த வாழ்வியல் முறையை உறுதி செய்வதில் நீர் ஆதாரங்களின் பங்களிப்புக் குறித்து மத்திய அமைச்சரின் கட்டுரையை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்
प्रविष्टि तिथि:
04 NOV 2025 1:31PM by PIB Chennai
சுற்றுச்சூழலுடன் இயைந்த வாழ்வியல் முறையில் பாதுகாப்பான நடைமுறைகள் உரிய காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி, தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் தொடர்பாக மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் எழுதியுள்ள கட்டுரையைப் பகிர்ந்துள்ள அவர், தமிழகத்தின் நீர் மேலாண்மை (ஏரிகள், மேல்நிலைத் தொட்டிகள்) அமைப்புகள் முதல் ராஜஸ்தானின் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் மற்றும் குளங்கள் வரை சுற்றுச்சூழலுக்கு உகந்த பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அவரது கட்டுரை அமைந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். நீடித்த வாழ்வியல் முறைகளுக்கு தொடக்கமாக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான வெறும் பேச்சுடன் இல்லாமல் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே இந்தியா அளிக்கும் செய்தியாக உள்ளது என்று திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் வெளியிட்டுள்ள கட்டுரைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:
“மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் எழுதியுள்ள கட்டுரையை அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும். இந்தியாவின் சுற்றுச்சூழலுடன் இயைந்த வாழ்வியல் முறை (லைஃப் இயக்கம்) குறித்த நேரத்தில் பாதுகாப்பான நடைமுறைகளுடன் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதுடன் தமிழகத்தில் உள்ள ஏரிகள், மேல்நிலைத் தொட்டிகள் போன்ற நீர் மேலாண்மை அமைப்புகள் முதல் ராஜஸ்தானின் மழைநீர் சேகரிப்பு மற்றும் குளங்கள் வரை நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும்.
நீடித்த வாழ்வியல் முறைகளுக்கு தொடக்கமாக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான வெறும் பேச்சுடன் இல்லாமல் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே இந்தியா அளிக்கும் செய்தியாக உள்ளது.
--------------
(Release ID 2186170)
AD/IR/KPG/AG
(रिलीज़ आईडी: 2186323)
आगंतुक पटल : 41
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam