தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்தியாவின் வளமான இசைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் 67-வது ஆகாஷ்வாணி சங்கீத் சம்மேளன் நிகழ்ச்சிகள் நவம்பர் 2 முதல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது
प्रविष्टि तिथि:
30 OCT 2025 6:56PM by PIB Chennai
மத்திய கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து பிரசார் பாரதி 67-வது பெருமைமிகு வருடாந்தர இசைத் திருவிழாவான ஆகாஷ்வாணி சங்கீத் சம்மேளன் நிகழ்ச்சிகள் நவம்பர் 2-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நாடு முழுவதிலும் உள்ள 24 மையங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1954-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இசைவிழா இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் அதனைப் போற்றும் விதமாகவும் அமைந்துள்ளது. இந்துஸ்தானி, கர்நாடக சங்கீதம், நாட்டுப்புறப் பாடல்கள் என பல்வேறு வகைகளில் நாடு முழுவதிலும் உள்ள இசை ஆர்வலர்களை கவர்ந்து வருகிறது. இந்தியாவின் வளமான இசைப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் ஊக்கம் அளிப்பதற்கும் பிரபலப்படுத்துவதற்கும் முக்கியப் பங்காற்றும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இசைக்கலைஞர்களும், இசை ஆர்வலர்களும் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி வளர்ந்து வரும் இசைக்கலைஞர்களையும் ஏற்கனவே இசைத்துறையில், பிரபலமானவர்களையும் ஒன்றிணைக்கும் பாலமாகவும் அவர்களுக்கு தேசிய அளவிலான அங்கீகாரத்தையும் பெருமையையும் வழங்கும் வகையில் உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2184309
****
AD/SV/KPG/SH
(रिलीज़ आईडी: 2184995)
आगंतुक पटल : 35