பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
20 ஆண்டுகளில் உலகளாவிய எரிசக்தி தேவையில் சுமார் 30 சதவீதம் அளவுக்கு இந்தியா பங்களிக்கும் – மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி
Posted On:
29 OCT 2025 2:06PM by PIB Chennai
இந்தியாவின் விரைவான பொருளாதார வளர்ச்சி எரிசக்தி மற்றும் கப்பல் துறைகளின் வளர்ச்சியுடன் நெருங்கிய தொடர்புடையது என்றும் இது நாட்டின் வளர்ச்சிக்கு வலிமையான தூண்களாக ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இந்திய கடல்சார் வாரம் 2025-ன் ஒரு பகுதியாக மும்பையில் நடைபெற்ற புத்துயிர் ஊட்டும் இந்தியாவின் கடல்சார் உற்பத்தி மாநாட்டில் உரையாற்றிய அவர், இந்தியப் பொருளாதாரம் விரைவாக வளர்ச்சியடைவதாகவும், தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.3 டிரில்லியன் டாலராக உள்ளதாக குறிப்பிட்டார். இதில் பகுதியளவு ஏற்றுமதிகள், இறக்குமதிகள் உள்ளிட்ட துறைகளிடமிருந்து கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.
எரிசக்தி துறை குறித்து குறிப்பிட்ட திரு பூரி, இந்தியா தற்போது நாளொன்றுக்கு 5.6 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை நுகர்வதாகவும் இது நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு 5 மில்லியன் பேரல்களாக இருந்ததாகவும் தெரிவித்தார். தற்போதைய வளர்ச்சி விகிதத்தில் நாடு நாளொன்றுக்கு 6 பில்லியன் பேரல் என்ற நிலையை விரைவில் எட்டிவிடும் என்று தெரிவித்தார். அடுத்த 20 ஆண்டுகளில் உலகளாவிய எரிசக்தி தேவையில் சுமார் 30 சதவீதம் அளவுக்கு இந்தியா பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச எரிசக்தி முகமையின் அறிக்கையை அவர் சுட்டிக்காட்டினார். இது முன்னதாக 25 சதவீதம் என கணிக்கப்பட்டிருந்தது.
இந்த அதிகரித்து வரும் எரிசக்தித் தேவை, உலகம் முழுவதும் எண்ணெய், எரிவாயு மற்றும் பிற எரிசக்திப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான கப்பல்களுக்கான இந்தியாவின் தேவையை இயற்கையாகவே அதிகரிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2183703
***
SS/IR/AG/SH
(Release ID: 2183934)
Visitor Counter : 5