தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்தியாவின் ஊடக-தொழில்நுட்ப தொழில்முனைவோரின் எதிர்காலத்தை வடிவமைக்க, உலகின் மிகப்பெரிய புத்தொழில் மையமான டி-ஹப்புடன் வேவ்எக்ஸ் இணைந்து செயல்படுகிறது
Posted On:
28 OCT 2025 7:44PM by PIB Chennai
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் புத்தொழில் நிறுவன முடுக்கி முன்முயற்சியான வேவ்எக்ஸ், இந்தியாவின் படைப்பாற்றல், உள்ளடக்கம் மற்றும் ஊடக-தொழில்நுட்ப புத்தொழில் சூழலியலை மேம்படுத்துவதற்காக உலகின் மிகப்பெரிய புத்தொழில் மையமான டி-ஹப் உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, தெலங்கானா அரசின் தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத் துறையின் சிறப்பு தலைமைச் செயலாளர் திரு சஞ்சய் குமார் மற்றும் அமைச்சகத்தின் பிற அதிகாரிகள் முன்னிலையில் வேவ்எக்ஸ் மற்றும் டி-ஹப் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு சஞ்சய் ஜாஜு, இந்தியாவின் அனிமேஷன், காட்சிப்படிமங்கள், விளையாட்டு, படக்கதைகள், விரிவாக்கப்பட்ட காட்சி மற்றும் எதார்த்த தளங்களின் துறை விரைவான வளர்ச்சியைக் கண்டு வருவதாகவும், படைப்பு பொருளாதாரத்தின் முக்கிய இயக்கியாக வளர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார். ஊடகம், பொழுதுபோக்கு மற்றும் அதிவேக தொழில்நுட்பத்தில் புத்தொழில் நிறுவனங்களை வளர்ப்பதற்கும், படைப்பாளர்களை மேம்படுத்துவதற்கும் ஒரு தேசிய முடுக்கி தளமாக வேவ்எக்ஸ் கருத்தாக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2183506
***
(Release ID: 2183506)
SS/BR/KR
(Release ID: 2183637)
Visitor Counter : 4