பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

"அனைவரின் திட்டமும், அனைவரின் வளர்ச்சியும்’’ என்னும் பொது சேவை விழிப்புணர்வு குறும்படத்தின் நாடு தழுவிய திரையிடல் இன்று தொடங்குகிறது

Posted On: 24 OCT 2025 10:12AM by PIB Chennai

"அனைவரின் திட்டமும், அனைவரின் வளர்ச்சியும்’’ என்னும் இரண்டு நிமிட பொது சேவை விழிப்புணர்வு குறும்படம் இன்று முதல் (அக்டோபர் 24, 2005) நவம்பர் 6-ம் தேதி வரை நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்படுகிறது.  பிரதமரின் மக்கள் பங்கேற்பு மற்றும் அரசுத் திட்டங்கள் பற்றிய தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, இந்தப் பிரச்சாரம் 2026–27 நிதியாண்டிற்கான பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டங்களைத் தயாரிப்பதில் பொது விழிப்புணர்வையும் மக்களின் பங்களிப்பையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அடிமட்ட அளவில் வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் முக்கிய பங்கு உண்டு என்ற செய்தியை இது வலுப்படுத்துகிறது. தற்போது தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள மாநிலங்களைத் தவிர, பொது சேவை விழிப்புணர்வு திரைப்படங்கள் திரையிடுவதற்கான  வழிகாட்டுதல்களின்படி, இந்தக் குறும்படம் நாடு தழுவிய அளவில் திரையரங்குகளில் திரையிடப்படும். இந்தக் குறும்படம், திரைப்படம் தொடங்குவதற்கு முன்பும், இடைவேளையின்போதும்  ஒளிபரப்பப்படும்.

மக்கள் திட்டப் பிரச்சாரம் அக்டோபர் 2, 2025 அன்று நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தொடங்கப்பட்டது. இது, பஞ்சாயத்துகள் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் மூலம் தேசிய இலக்குகளுடன் இணைந்து உள்ளூர் முன்னுரிமைகளை பிரதிபலிக்கும் சான்றுகள் அடிப்படையிலான மற்றும் உள்ளடக்கிய பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டங்களைத் தயாரிக்க உதவுகிறது.  இது ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும், பங்கேற்பு திட்டமிடலை நிறுவனமயமாக்குவதிலும், கிராமப்புற இந்தியா முழுவதும் சுயராஜ்யத்தின் அடித்தளங்களை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளது

மக்கள் திட்டப் பிரச்சாரம் குறித்த பொது சேவை விழிப்புணர்வு குறும்படத்தின் இந்த நாடு தழுவிய வெளியீடு மூலம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுடன் மக்களின் ஈடுபாட்டை அதிகரிக்கவும், உள்ளூர் நிர்வாகம் மற்றும் கிராமப்புற வளர்ச்சியில் தீவிரமாகப் பங்கேற்க அவர்களை ஊக்குவிக்கவும் முயல்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182010   

***

SS/PKV/RJ


(Release ID: 2182090) Visitor Counter : 12