பிரதமர் அலுவலகம்
ஆந்திரப்பிரதேச பயணம் குறித்தப் பார்வையை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்
प्रविष्टि तिथि:
16 OCT 2025 9:55PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தனது ஆந்திரப்பிரதேச பயணம் குறித்த கண்ணோட்டத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரம்மாரம்பா மல்லிகார்ஜூன சுவாமி கோவிலில் வழிபாடு செய்த பிரதமர் திரு நரேந்திர மோடி ஸ்ரீ சிவாஜி தியான மந்திர் மற்றும் ஸ்ரீ சிவாஜி தர்பார் மண்டபத்தையும் பார்வையிட்டார். பின்னர், கர்நூலில் 13,430 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன் நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஸ்ரீசைலம் வர்லா தேவஸ்தானத்தில் உள்ள ஸ்ரீ பிரம்மாரம்பா மல்லிகார்ஜூன சுவாமி கோவிலில் பிரார்த்தனை செய்தேன். எனது இந்திய குடிமக்கள் உடல் ஆரோக்கியத்துடனும் நலமாகவும் வாழ பிரார்த்தித்துக் கொண்டேன். ஒவ்வொருவரும் மகிழ்ச்சி மற்றும் வளமையுடன் வாழ பிரார்த்தனை செய்தேன்.”
“ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ சிவாஜி தியான மந்திர் மற்றும் ஸ்ரீ சிவாஜி தர்பார் மண்டபத்திற்கும் சென்று பார்வையிட்டேன். 1677-ம் ஆண்டில் சத்ரபதி சிவாஜி மகராஜ் ஸ்ரீசைலத்திற்கு வருகை புரிந்ததும், ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜூன கோவிலில் பிரார்த்தனை மேற்கொண்டார்.”
தியான மந்திரில் தியானம் மேற்கொண்ட அவர், பிரம்மாரம்பா தேவியின் ஆசியையும் பெற்றார்.
“ஸ்ரீசைலத்தில் இருந்த தருணங்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்தது. இந்தப் புனிதமான இடத்தில் ஒவ்வொரு பகுதியிலும் தெய்வீகம் உள்ளது. என்னை அன்புடன் வரவேற்ற இப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்ரீ பிரம்மாம்பிகா தேவி மற்றும் மல்லிகார்ஜூன சுவாமி நமது நாட்டிற்கு எப்போதும் தொடர்ந்து ஆசி வழங்குவாராக.”
“வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான கனவுகளை நனவாக்குவதில் ஆந்திரப்பிரதேச மாநிலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள ராயலசீமா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அமைந்துள்ளது. ஆந்திரப்பிரதேசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரு சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் உறுதியுடன் பணியாற்றி வருகிறது.”
“அண்மை ஆண்டுகளில் ஆந்திரப்பிரதேசம் மாநிலம் எரிசக்தித்துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டி சாதனைப் படைத்துள்ளது. இன்று தொடங்கி வைக்கப்பட்ட திட்டப் பணிகள் இம்மாநிலத்தில் எரிசக்தித் திறனை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்துவதுடன் இத்துறையில் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பங்களிக்கும்.”
“இந்தியாவின் முதலாவது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மையம் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. இது ஒட்டுமொத்த உலகிற்கும் பயனளிக்கும். விசாகப்பட்டினத்தில் தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் உலக அளவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொடர்பு மையத்திற்கான புதிய அடையாளமாக திகழும்.”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2180165
***
SS/SV/KPG/SG
(रिलीज़ आईडी: 2181729)
आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam