பிரதமர் அலுவலகம்
குரு சரண் யாத்திரையில் இணையவும், புனிதமான 'ஜோர் சாஹிப்' தரிசனம் மேற்கொள்ளவும் மக்களை பிரதமர் வலியுறுத்துகிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
22 OCT 2025 6:11PM by PIB Chennai
குரு சரண் யாத்திரையை முன்னிட்டு, ஸ்ரீ குரு கோவிந்த் சிங் மற்றும் அன்னை சாஹிப் கவுர் ஆகியோரின் காலத்தால் அழியாத போதனைகள் மற்றும் ஆன்மீக மாண்புகளைப் போற்றி, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த ஆன்மீக யாத்திரையில் கலந்து கொண்டு 'ஜோர் சாஹிப்’-ன் தரிசனத்தை மேற்கொள்ளுமாறு குடிமக்களை, குறிப்பாக யாத்திரை செல்லும் பாதையில் வசிப்போரை அவர் கேட்டுக்கொண்டார்.
மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த பதிவுகளுக்கு பதிலளித்து திரு மோடி கூறியதாவது:
“ஸ்ரீ குரு கோவிந்த் சிங் மற்றும் அன்னை சாஹிப் கவுர் ஆகியோரின் உன்னத கோட்பாடுகளுடனான நமது ஆழ்ந்த தொடர்பை குரு சரண் யாத்திரை மேலும் ஆழப்படுத்தட்டும். யாத்திரை செல்லும் பாதையில் வசிக்கும் மக்கள், இதில் கலந்துகொண்டு, புனித 'ஜோர் சாஹிப்’-ன் தரிசனத்தைப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.”
(Release ID: 2181596)
***
SS/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2181665)
வருகையாளர் எண்ணிக்கை : 33
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam