பிரதமர் அலுவலகம்
தீபாவளி வாழ்த்துகளுக்காக அமெரிக்க அதிபர் திரு டொனால்டு ட்ரம்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர், பகிரப்பட்ட ஜனநாயக சிந்தனைகள் மற்றும் உலகளாவிய அமைதிக்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்
Posted On:
22 OCT 2025 8:25AM by PIB Chennai
விளக்குகளின் திருவிழாவைக் குறிக்கும் தருணத்தில் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்து அன்பான தீபாவளி வாழ்த்து தெரிவித்ததற்காக அமெரிக்க அதிபர் திரு டொனால்டு ட்ரம்புக்கு தமது மனமார்ந்த பாராட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா – அமெரிக்கா இடையே நீடிக்கும் கூட்டாண்மையின் பலத்தை எடுத்துரைத்த பிரதமர், பயங்கரவாத எதிர்ப்பிலும் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதிலும், இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட செய்தியில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:
“உங்களின் தொலைபேசி அழைப்புக்கும் அன்பான தீபாவளி வாழ்த்துகளுக்கும் நன்றி அதிபர் ட்ரம்ப். விளக்குகளின் திருவிழாவில், நமது இரண்டு பெரிய ஜனநாயகங்கள் நம்பிக்கையுடன் உலகை ஒளிரச் செய்வதை தொடர்வோம். அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஒன்றுபட்டு நிற்போம்.
@realDonaldTrump
@POTUS”
***
(Release ID: 2181390 )
SS/SMB/KPG/RJ
(Release ID: 2181475)
Visitor Counter : 16
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam