பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
அருணாச்சலப் பிரதேசத்தின் ஷி யோமி மாவட்டத்தில் 240 மெகாவாட் திறன் கொண்ட ஹியோ நீர் மின் திட்டத்தை நிர்மாணிப்பதற்கான முதலீட்டு முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
प्रविष्टि तिथि:
25 NOV 2024 8:49PM by PIB Chennai
1939 கோடி ரூபாய் முதலீட்டில் அருணாச்சலப் பிரதேசத்தின் ஷி யோமி மாவட்டத்தில் ஹியோ நீர் மின் திட்டத்தை (HEP) நிர்மாணிப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தை 50 மாதங்களில் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
240 மெகாவாட் (3 x 80 மெகாவாட்) நிறுவப்பட்ட திறன் கொண்ட இந்தத் திட்டம், 1000 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இந்தத் திட்டத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் மின்சார விநியோக நிலையை மேம்படுத்தவும், தேசிய மின் இணைப்பை சமநிலைப்படுத்தவும் உதவும்.
இந்தத் திட்டம், வடகிழக்கு மின்சார எரிசக்திக் கழகம் மற்றும் அருணாச்சலப் பிரதேச அரசு ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படும். இந்திய அரசு, சாலைகள், பாலங்கள் மற்றும் தொடர்புடைய மின் இணைப்புகள் கட்டுவதற்கு ஆதரவாக ரூ.127.28 கோடியை வழங்கும். மேலும், மாநிலத்தின் பங்காக ரூ.130.43 கோடியை மத்திய நிதியுதவியிலிருந்து வழங்கப்படும்.
இப்பகுதியின் குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு கூடுதலாக, 12% இலவச மின்சாரமும், உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதிக்கு (LADF) மற்றொரு 1% மானியமும் மாநிலத்திற்கு வழங்கப்படும்.
தற்சார்பு இந்தியா திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களுக்கு ஏற்ப, இந்தத் திட்டம், உள்ளூர் விநியோகஸ்தர்கள் / நிறுவனங்கள் / எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும். கட்டுமான நிலையில், இந்த திட்டத்திற்கு வடகிழக்கு மின்சார எரிசக்திக் கழகத்திலிருந்து சுமார் 200 பணியாளர்களும், ஒப்பந்ததாரரிடமிருந்து சுமார் 400 தொழிலாளர்களும் தேவைப்படும். கூடுதலாக, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் போது பல்வேறு சிறிய ஒப்பந்தங்கள் மற்றும் சேவைகள் மூலம் உள்ளூர் சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்தத் திட்டம், இயக்கம் மற்றும் பராமரிப்பின் போதும் வேலைவாய்ப்பை வழங்கும். மேலும், அதன் வளர்ச்சியால் போக்குவரத்து, சுற்றுலா, சிறு வணிகங்கள் போன்ற துறைகளில் வேலைவாய்ப்பு உருவாகும்.
***
(Release ID: 2077106)
SS/BR/SG
(रिलीज़ आईडी: 2181281)
आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Nepali
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam