பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டங்களின் சிறப்புகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்

Posted On: 21 OCT 2025 9:30AM by PIB Chennai

இந்தியக் கடற்படையினருடன் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் தாம் கலந்து கொண்ட தீபாவளிக் கொண்டாட்டங்களின்  சிறப்புகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்நாள் சிறப்புமிக்க நாள் என்றும், சிறப்புமிக்க தருணம் என்றும், சிறப்புமிக்க பார்வையுடையது என்றும் குறிப்பிட்ட திரு மோடி,  ஒரு புறம்  பரந்த அளவிலான கடலும் மற்றொரு புறம் இந்தியத் தாயின் துணிச்சல்மிக்க வீரர்களின் மகத்துவமான வலிமையும் இருப்பதாக சுட்டிக்காட்டினார். கடலில் எழும் சூரியக் கதிர்கள், தீபாவளி பண்டிகையின் போது, துணிச்சல் மிக்க வீரர்கள் ஏற்றிய புனிதமிக்க ஒளிவிளக்குகளைப் போன்று காணப்படுவதாக குறிப்பிட்டார்.

இந்தியக் கடற்படையின் துணிச்சல்மிக்க வீரர்களுடன் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது தமக்குக் கிடைத்த கௌரவம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:

“ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் நமது துணிச்சல்மிக்க கடற்படை வீரர்களுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடுகிறேன்.”

“மக்கள் தீபாவளியை தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடுவதை விரும்புகின்றனர். அதனால் தான் நமது நாட்டைப் பாதுகாக்கும் நமது ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினரை ஆண்டுதோறும் நான் சந்திக்கிறேன். கோவா – கார்வார் கடல்பகுதியில் இந்தியக் கடற்படை கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில்  நமது துணிச்சல்மிக்க கடற்படையினருடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.”

“ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் துல்லியம் மற்றும் திறனை வெளிப்படுத்தும் விமான செயல்முறையைக் கண்டேன். பகல் மற்றும் இரவு நேரங்களில் சிறிய ஓடுபாதையில் மிக் 29 விமானம் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் திறன் மற்றும் தொழில்நுட்ப சிறப்பின் அபார வெளிப்பாடு.”

“பாரா கானா என்பது ஆயுதப்படைகளின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். நேற்று மாலை ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலின் கடற்படையினருடன் பாரா கானா நிகழ்வில் கலந்து கொண்டேன்.”

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் இந்தியாவின் பெருமை.

இது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மிகப் பெரிய போர்க்கப்பலாகும்.

கொச்சியில் இக்கப்பல் அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சியை நான் நினைவு கூருகிறேன். தற்போது தீபாவளியையொட்டி, இங்கே இருக்கும் வாய்ப்பை நான் பெற்றேன்.”

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் நேற்று நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சிகள் என்றும் பாராட்டப்படக் கூடியதாகும். கடற்படையினர் உண்மையிலேயே படைப்பாற்றல் மிக்கவர்களாகவும், பல்வேறு அனுபவமிக்கவர்களாகவும் உள்ளனர். அவர்கள் எழுதிய ‘கசம் சிந்தூர் கி­என்ற பாடல் என்றும் என் நினைவில் இருக்கும்.”

“ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் யோகா!

இந்தியாவின் பெருமைமிக்க ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில், கடற்படை வீரர்கள் யோகா அமர்வில் பங்கேற்பதைக் கண்டது சிறப்பு.

யோகா நம்மைத் தொடர்ந்து ஒருங்கிணைத்து நம்முடைய உடல் மற்றும் மனநலத்தை வலுப்படுத்தட்டும்.”

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181097   

***

SS/IR/KPG/SG


(Release ID: 2181225) Visitor Counter : 10