பிரதமர் அலுவலகம்
ராணி ரஷ்மோனியின் பிறந்த நாளில் பிரதமர் மோடி புகழாரம்
இடுகை இடப்பட்ட நாள்:
28 SEP 2025 10:17PM by PIB Chennai
ராணி ரஷ்மோனியின் பிறந்த நாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். தைரியம், இரக்கம் மற்றும் உறுதியான நம்பிக்கை கொண்ட மாபெரும் ஆளுமையாக அவரைப் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "ராணி ரஷ்மோனி தைரியம், இரக்கம் மற்றும் உறுதியான நம்பிக்கை கொண்ட மாபெரும் ஆளுமையாக விளங்கினார்.
தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவராகவும், தொண்டுள்ளம் கொண்டவராகவும் அவர் அன்புடன் நினைவுகூரப்படுகிறார். அவர் நிலையான நிறுவனங்களை உருவாக்கினார். ஆன்மீகத்தின் மீதும், ஏழைகளின் மேம்பாட்டின் மீதும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு கொண்டிருந்தார். அவரது பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்."
***
(Release ID: 2172523)
SS/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2181172)
வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam