பிரதமர் அலுவலகம்
முதுபெரும் நடிகர் திரு கோவர்தன் அஸ்ரானியின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
21 OCT 2025 9:16AM by PIB Chennai
முதுபெரும் நடிகர் திரு கோவர்தன் அஸ்ரானியின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் புகழ்பெற்ற கலைஞருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பையும், பல தலைமுறை பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் அவரது திறமையையும் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:
"திரு கோவர்தன் அஸ்ரானி அவர்களின் மறைவால் மிகவும் வருந்தினேன். ஒரு திறமையான பொழுதுபோக்குக் கலைஞர் மற்றும் பன்முகக் கலைஞரான அவர். பல தலைமுறைகளின் பார்வையாளர்களை மகிழ்வித்தார். குறிப்பாக தனது மறக்க முடியாத நடிப்பாற்றல் மூலம் எண்ணற்றோர் வாழ்க்கையில் அவர் மகிழ்ச்சியையும் நகைச்சுவையையும் சேர்த்தார். இந்திய சினிமாவுக்கு அவரின் பங்களிப்பு எப்போதும் போற்றப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி."
*****
(Release ID: 2181068)
SS/SMB/SG
(வெளியீட்டு அடையாள எண்: 2181110)
வருகையாளர் எண்ணிக்கை : 29
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam