பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தேசிய பாதுகாப்புப் படை தினத்தை முன்னிட்டு வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 16 OCT 2025 9:09PM by PIB Chennai

தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) தினத்தை முன்னிட்டு வீரர்களின் ஈடு இணையற்ற துணிச்சலையும், அர்ப்பணிப்பையும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். “நமது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக்களைப் பாதுகாத்து, தீவிரவாத அச்சுறுத்தலில் இருந்து நாட்டைக் காக்கும் அளப்பரிய பணியை தேசிய பாதுகாப்புப் படை மேற்கொண்டுள்ளது”, என்று திரு மோடி குறிப்பிட்டார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது:

“தேசிய பாதுகாப்புப் படை தினத்தை முன்னிட்டு, என்எஸ்ஜி வீரர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தனது தன்னிகரில்லாத துணிச்சலுக்கும், அர்ப்பணிப்பிற்கும் இந்தப்படை பெயர் பெற்றுள்ளது. நமது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக்களைப் பாதுகாத்து, தீவிரவாத அச்சுறுத்தலில் இருந்து நாட்டைக் காக்கும் அளப்பரிய பணியை தேசிய பாதுகாப்புப் படை மேற்கொண்டுள்ளது.”

@nsgblackcats

(Release ID: 2180147)

***

AD/BR/SH


(रिलीज़ आईडी: 2180177) आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada