பாதுகாப்பு அமைச்சகம்
2029-ம் ஆண்டுக்குள் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்ய முடியும் – பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
Posted On:
16 OCT 2025 2:47PM by PIB Chennai
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நாட்டின் வளர்ந்து வரும் உள்நாட்டு திறனுக்கான ஒளிரும் சாட்சியம் என்றும் இது நாட்டில் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி சூழலில் தற்சார்பை உருவாக்குவதற்கான அரசின் அயராத முயற்சிகளின் விளைவாகும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். புனேயில் உள்ள சிம்பயாசிஸ் திறன் மற்றும் தொழில் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் 2025 அக்டோபர் 16 அன்று உரையாற்றிய அவர், உண்மை, நம்பிக்கை போன்ற பண்புகளின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.
பாதுகாப்புத்துறையில் இந்தியாவை தற்சார்புடையதாக திகழச் செய்ய வேண்டும் என்ற பணியை தொடங்கிய போது, அது கடினமாக இருந்ததாகவும் எனினும், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், உள்நாட்டு பாதுகாப்புத் தளவாட உற்பத்தி விரிவாக்கம் அடைந்து அந்த முயற்சிகள் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்த தொடங்கியதாக குறிப்பிட்டார்.
பாதுகாப்புத் துறையில் மாற்றத்தை அடைய வேண்டும் என்று நாம் உறுதிபூண்டோம். ஏனென்றால் சுதந்திரம் பெற்றது முதல் ஆயுதங்களுக்காக மற்ற நாடுகளை நாம் பெரிதும் சார்ந்திருக்க வேண்டியிருந்தது.
கடந்த 10 ஆண்டுகளில் பாதுகாப்புத் தளவாடம் உற்பத்தி ரூ.46,000 கோடியிலிருந்து ரூ.1.5 லட்சம் கோடி அளவிற்கு அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதில் ரூ.33,000 கோடி அளவிலான உற்பத்தி தனியார் துறையைச் சார்ந்தது என்றும் 2029-ம் ஆண்டுக்குள் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடங்களை நாம் உற்பத்தி செய்வோம் என்றும் ரூ.50,000 கோடி மதிப்பிலான தளவாடங்களை ஏற்றுமதி செய்வோம் என்றும் திரு ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2179836
***
SS/IR/KPG/SH
(Release ID: 2180088)
Visitor Counter : 8