பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தான் ஜெய்சால்மரில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 14 OCT 2025 10:50PM by PIB Chennai

ராஜஸ்தான் ஜெய்சால்மரில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் திரு மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.


உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“ராஜஸ்தான் ஜெய்சால்மரில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது கவலை அளிக்கிறது. இந்த கடினமான தருணத்தில் எனது எண்ணங்கள் பாதிக்கப்பட்ட மக்களுடனும் அவர்களுடைய குடும்பத்தாருடனும் உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-மும் வழங்கப்படும்”

------

(Release ID: 2179190 )

SS/IR/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2179785) வருகையாளர் எண்ணிக்கை : 24