உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நக்சல் தீவிரவாதத்தை அடுத்த ஆண்டு மார்ச் 31-க்குள் முற்றிலும் அகற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியுடன் உள்ளது: உள்துறை அமைச்சகம்

Posted On: 15 OCT 2025 4:57PM by PIB Chennai

நக்சல் தீவிரவாதம் இல்லாத இந்தியாவை கட்டமைக்கும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நக்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 6லிருந்து 3ஆக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள பிஜாப்பூர், சுக்மா மற்றும் நாராயண்பூர் ஆகிய 3 மாவட்டங்கள் மட்டுமே நக்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக நக்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 18லிருந்து 11ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நக்சல் தீவிரவாதத்தை அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் முற்றிலும் அகற்றுவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் உள்துறை அமைச்சர் திரு அமித்ஷாவின் வழிகாட்டுதலின்படி நக்சல் தீவிரவாதத்தை கட்டுபடுத்துவதற்கான நடவடிக்ககள் முந்தைய அனைத்து சாதனைகளையும் கடந்து வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆண்டு மாவோயிஸ்ட் அமைப்பின் பொதுச்செயலாளர் மற்றும் இதர 8 உறுப்பினர்கள் உட்பட 312 நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 836 நக்சல் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 1639 தீவிரவாதிகள் சரணடைந்துள்ளனர்.

பன்முகத் தன்மையுடன் கூடிய அணுகுமுறைகள், தேசிய செயல் திட்டம் மற்றும் கொள்கைகளை கடுமையாக அமல்படுத்தியுள்ளதன் மூலம் நக்சல் தீவிரவாதத்திற்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் முன் எப்போதும் இல்லாத வகையில் வெற்றி பெற்றுள்ளது. நக்சல் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான செயல்பாடுகளில் மக்களின் நட்பு, துல்லியமான புலனாய்வு தகவல்கள் உட்பட தேசிய செயல்திட்டம் மற்றும் அரசின் கொள்கைகள் அமைந்துள்ளன. பாதுகாப்பு இல்லாத பகுதிகளில் மக்களின் ஆதரவுடன் நக்சல் தீவிரவாத அமைப்பின் உயர்மட்ட தலைவர்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவான வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், நலத்திட்டங்களை மேற்கொள்ளுதல் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்பு, மாவோயிஸ்ட் தொடர்பான வழக்குகளில் விரைவான விசாரணைகளை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகள் தீவிரவாத செயல்களை விரைவாக குறைக்க உதவியுள்ளது.

2010ஆம் ஆண்டில் உள்நாட்டு பாதுகாப்பு மிகப் பெரிய சவாலாக உள்ளது என்று தெரிவித்திருந்த நிலையில் நக்சல் தீவிரவாதத்தை கட்டுபடுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளை கண்கூடாக காண முடிகிறது. நேபாளத்தில் உள்ள பசுபதி நகரிலிருந்து ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி வரை நக்சல் தீவிரவாதம் பரவி இருந்தது. கடந்த 2013ஆம் ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் 126 மாவட்டங்களில் நக்சல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன என்று மாநில அரசுகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் 2025 ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை 18 மாவட்டங்களாக குறைக்கப்பட்டிருப்பதுடன், 6 மாவட்டங்கள் மட்டுமே நக்சல் தீவிரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது,

***

(Release ID: 2179459 )

AD/SV/KPG/SH


(Release ID: 2179637) Visitor Counter : 5