பிரதமர் அலுவலகம்
குவால்காம் நிறுவனத்தின் தலைவர், பிரதமருடன் சந்தப்பு; செயற்கை நுண்ணறிவு, திறன் மேம்பாடு போன்றவற்றில் இந்தியாவின் முன்னேற்றங்கள் குறித்துப் பேச்சு
प्रविष्टि तिथि:
11 OCT 2025 2:03PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியை, குவால்காம் நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான திரு கிறிஸ்டியானோ ஆர். அமோன் சந்தித்துப் பேசினார். செயற்கை நுண்ணறிவு, புதுமைக் கண்டுபிடிப்புகள், திறன் மேம்பாடு ஆகியவற்றில் இந்தியாவின் முன்னேற்றங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
இந்தியாவின் செமிகண்டக்டர் (குறைக்கடத்தி) துறை, செயற்கை நுண்ணறிவுத் திட்டங்கள் ஆகியவற்றின் மீது குவால்காம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை பிரதமர் பாராட்டினார். கூட்டாக இணைந்து சிறந்த எதிர்காலத்தை வடிவமைக்கும் தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என பிரதமர் கூறினார். இதில் இந்தியா சிறந்த திறமையைக் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
குவால்காமின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான திரு கிறிஸ்டியானோ ஆர். அமோன், இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு இயக்கம், இந்தியாவின் செமிகண்டக்டர் இயக்கம், 6ஜி தொழில்நுட்ப மாற்றம் ஆகயவற்றுக்கு ஆதரவு அளிப்பதில், இந்தியாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாக கூறினார். இது குறித்த விரிவான விவாதத்திற்காக அவர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். செயற்கை நுண்ணறவு ஸ்மார்ட்போன்கள், கணினிகள், வாகன தொழில்துறை, பிற தொழில்துறைகள் போன்றவற்றில் இந்திய தொழில் அமைப்பை சிறப்பாக மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகளை அவர் எடுத்துரைத்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"திரு கிறிஸ்டியானோ ஆர். அமோனுடனான சந்திப்பு ஒரு அற்புதமான சந்திப்பாக இருந்தது. செயற்கை நுண்ணறிவு, புதுமைக் கண்டுபிடிப்பு, திறன் மேம்பாடு ஆகியவற்றில் இந்தியாவின் முன்னேற்றங்களைப் பற்றி இதில் விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் செமிகண்டக்டர் (குறைக்கடத்தி), செயற்கை நுண்ணறிவு இயக்கப் பணிகளில் குவால்காமின் அர்ப்பணிப்பைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கூட்டாக இணைந்து சிறந்த எதிர்காலத்தை வடிவமைக்கும் தொழில்நுட்பங்களை உருவாக்க இந்தியா எல்லையற்ற திறமையை வழங்குகிறது. @cristianoamon, @Qualcomm”
***
(Release ID: 2177747)
AD/PLM/RJ
(रिलीज़ आईडी: 2177842)
आगंतुक पटल : 25
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam