தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய இதிகாசமான மகாபாரதம் தேசிய தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பாகிறது

Posted On: 10 OCT 2025 11:56AM by PIB Chennai

இந்தியாவில் மிகவும் கொண்டாடப்படுகின்ற இதிகாசமான மகாபாரதம் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துடன் மறுவுருவாக்கம் செய்யப்பட்டிருப்பதாக கலெக்டிவ் மீடியா நெட்வொர்க் அறிவித்துள்ளது.  இந்தத் தொடர் வேவ்ஸ் ஓடிடி தளத்தில் 2025 அக்டோபர் 25 அன்று ஒளிபரப்பாகும். இதைத் தொடர்ந்து 2025 நவம்பர் 02 முதல் ஒவ்வொரு ஞாயிறன்றும் காலை 11.00 மணிக்கு தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும். இந்தத் தொடர் அதே நேரத்தில் இந்தியாவிலும், உலகம் முழுவதிலும் டிஜிட்டல் பார்வையாளர்களுக்கு வேவ்ஸ் ஓடிடி மூலம் கிடைக்கும்.

நவீன செயற்கை நுண்ணறிவு கருவிகளின் உதவியுடன் இந்தத் தொடர் மிகப்பெரிய மகாபாரத கதையை மறுகட்டமைப்பு செய்கிறது. அதன் கதாபாத்திரங்கள், போர்க்களங்கள், உணர்ச்சிப் பெருக்குகள், நீதிநெறிகள் போன்றவை திரைப்பட பாணியிலும் யதார்த்தமாகவும் இருக்கும் வகையில் இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. மேக்-இன்- இந்தியா, டிஜிட்டல் இந்தியா ஆகிய உணர்வின் அடிப்படையில் பாரம்பரியமும், புத்தாக்கமும் எவ்வாறு ஒருங்கிணைந்து முன்செல்ல முடியும் என்பதை வெளிப்படுத்துவதாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.

பிரசார் பாரதி, கலெக்டிவ் மீடியா நெட்வொர்க் ஒத்துழைப்பு குறித்து பேசிய பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி கௌரவ் துவிவேதி, ஒவ்வொரு இந்தியக் குடும்பத்துக்கும், தேசிய மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை பிரசார் பாரதி எப்போதும் கொண்டுவருகிறது என்றார். பொதுமுடக்க காலத்தில் மகாபாரத தொடர் மறுஒளிபரப்பு செய்யப்பட்ட போது குடும்பங்களிலும், பல தலைமுறைகளிடமும் எவ்வாறு ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது உணரப்பட்டது. அதன் அடிப்படையில் இந்தியாவின் மகத்தான இதிகாசமான மகாபாரதத்தை தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் காணும் அனுபவத்தை பார்வையாளர்களுக்கு பிரசார் பாரதி வழங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இதுபற்றி கருத்து தெரிவித்த கலெக்டிவ் ஆர்டிஸ்ட் நெட்வொர்க் அமைப்பின் நிறுவனரும், தலைமை நிர்வாகியுமான விஜய் சுப்ரமணியம், நமது பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள பக்தியும், முன்னேற்றமும் ஒருங்கிணைந்து முன்னேறுவது பற்றிய படைப்பாக இது உள்ளது என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2177206  

***

SS/SMB/AG/SH


(Release ID: 2177584) Visitor Counter : 26